பளபளப்பான சருமத்துக்கு ஃபுரூட் ஃபேஷியல்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் தான்.. எப்படினு பாருங்க!

நம் சமையலறையில் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும் பொருட்கள் நிறைந்துள்ளன, அவை உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பிரகாசத்தை பெற உதவுகிறது. சில பழங்களில் வைட்டமின் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. சில சமயங்களில் ஃபுரூட் ஃபேஷியல் செய்து கொள்வதற்காகவே’ பார்லர்களில் நிறைய பணத்தை செலவிடுகிறோம்.

ரசாயனம் இல்லாத மேக்-ஓவருக்கு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழம் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் மாற்ற உதவுகிறது. மிருதுவான சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.

எப்படி செய்வது?

வாழைப்பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். நீங்கள் முகப்பரு மற்றும் பிக்மென்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் சிறிது தேன் சேர்க்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

பப்பாளி ஃபேஸ் பேக்

டேனிங்-க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கரும்புள்ளிகள் மற்றும் டேன் போன்றவற்றால் சருமம் சோர்வாக இருந்தால் இதை முயற்சிக்கவும்.

ஒரு பழுத்த பப்பாளியை எடுத்து’ உங்கள் தோலில் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு கழுவவும்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரி சருமத்தை குளிர்ச்சியாக்கும், இது வறண்ட சருமத்திற்கு சிறந்தது.

வெள்ளரிக்காயை அரைத்து சாற்றை முகத்தில் தடவவும். நீங்கள் கூழை ஃபிரிட்ஜில் வைத்து  அது குளிர்ந்தவுடன், கருவளையங்களுக்கு சிகிச்சையளிக்க ஐ மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளி சருமத்தை வெண்மையாக்கவும், இறுக்கமாகவும், பருக்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

ஒரு பழுத்த தக்காளியில் இருந்து 2 டீஸ்பூன் சாற்றை பிழிந்து, அதனுடன் 3 டீஸ்பூன் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை முகம், கழுத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு கழுவவும்.

அடுத்தமுறை பியூட்டி பார்லர் போக தேவையில்லை.. அதுக்கு பதிலா பளபளப்பான சருமத்துக்கு இந்த ஃபேஸ் பேக்குகளை கண்டிப்பா டிரை பண்ணுங்க!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.