மகளிர் உலக கோப்பை : நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி

வெலிங்டன்,
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின 
டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர்  அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து மகளிர்  அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை  இழந்தது. 30.2 ஓவர்களில் 128 ரன்களுக்கு  நியூசிலாந்து ஆட்டமிழந்தது.
 .இதனால் 141 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.