‘20,000 புத்தகம் படிச்சீங்களா… உங்க வயசு என்ன சார்?’ அண்ணாமலையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Tamilnadu BJP Leader Annamalai News Update In tamil : நான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களை படித்துள்ளேன்.. 12 ஆயிரம் புத்தகங்களை பராமரித்து வைத்துள்ளேன் என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகினறனர்.

தமிழக பாஜகவில் மாநில தலைவராக இருக்கும் முன்னாள் காவல்துறை அதிகாரி,  அண்ணாமலை, சமீபத்தில் சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் மோடி போன்று பெரிய பதவிகளில் அமர வேண்டும் என்றால் அனைவரும் தவறாமல் அதிக புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் இன்றைய இளைஞர்களை சமூகவலைதளங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், வாட்சப் கிசு கிசுக்களை பேசுவதை விட்டுவிட்டு, அனைவரும், வரலாறு மற்றும் அரசியல் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய அவர். மகாபாரதத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும் என்றும், இது ஒவ்வொருவரின் வாழ்க்கையை நேரில் பார்ப்பது போல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களை படித்துள்ளதாகவும். 12 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை பராமரித்து வைத்துள்ளதாகவும் கூறிய அவர், சாதி மதத்தை கடந்து மனிதன் ஆகவேண்டும் என்றால் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

அவரின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இவர் 20 ஆயிரம் புத்தகங்களை படித்துள்ளேன் என்று கூறியதை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தீர்கள் என்றால் ஒரு நாளைக்கு ஒரு புக் வீதம் கணக்கெடுத்தால், 54 வயது வருகிறது. இப்போ உங்களுக்கு என்ன வயது என்று கேட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன், நாட்டின் வளர்ச்சியைப் பற்றி கவலை கொள்ளாமல் இனவெறி, மதவெறியை மட்டுமே ஊட்டி வளர்த்ததன் பலனை இன்று இலங்கை அறுவடை செய்கிறது, ஒரு நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் இல்லை என்றால் இது போன்ற பொருளாதார சீரழிவைதான் சந்திக்க நேரிடும் அண்டை நாட்டின் நிகழ்வு நமக்கொரு பாடம்.. இதையும் படியுங்கள் என்று கூறியுள்ளார்.

மற்றொருவர் அவர் தனது 10 வயதில் புத்தகம் படிக்க தொடங்கியிருப்பார். ஒரு நாளைக்கு 2 புத்தகங்ள் வீதம் ஒரு வருடத்திற்கு 750 புத்தகங்களை படித்திருப்பார். ஒரு நாட்கள் கூட விடுபட்டுவிடாமல் தொடர்ச்சியாக 27 வருடங்கள் படித்துள்ளார். இதில் ஒரு புத்தகம் ரூ200 என்றால் புத்தகத்திற்காகவே அவர் 40 லட்சம் செலவு செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வரும் நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.