ஒரு தொலைக்காட்சியால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை மாறுமா? | உலக சினிமா

விசாரணை

WORLD CINEMA | The Judgement | De Veroordeling | 2021 | Dutch | 130 min |

’தி ஜட்ஜ்மெண்ட்’ படத்தில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் பாஸ் ஹான் கொலை வழக்கு விசாரணையில் தனது சொந்த கருத்தை உருவாக்குகிறார். அவரது தொலைக்காட்சி அறிக்கையின் விளைவாக ஒரு குடும்பத்தின் வாழ்க்கை தாறுமாறாகி, தடம்புரண்டு போகிறது. இனி என்ன ஆகும்?

இந்தப் படத்தின் இயக்குநர் Sander Burger 1975-ம் ஆண்டில் ஐவரி கோஸ்ட்டில் பிறந்தவர். அடிப்படை ஸ்கிரிப்ட் முதல் இயக்கம் வரை முழுமையாக கற்றுக் கொண்டு இந்தப் படத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

The Judgement | De Veroordeling

முதலாளி-தொழிலாளி

The Employer and the Employee | El empleado y el patrón | 2021 | Spanish, Portuguese, French | 106 min

முதலாளி-தொழிலாளி உறவுச் சிக்கல்கள் பற்றிப் பேசும் படம் இது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் முதலாளியாக இருக்கிறான். ஒரு நவீன வாழ்க்கையை வாழ்கிற அவனுக்கு கிராமப்புற பாரம்பரிய ஸ்டீரியோடைப் வாழ்க்கையில் விருப்பமில்லை. ஆனால், ஆனால் அவனுக்கு ஓர் அழுத்தமான கவலை உள்ளது. அது அவனது குழந்தையின் ஆரோக்கியம்.

அந்த முதலாளியின் தொழிலாளி அவனைவிட இளையவன். அவசரத் தேவையாக உள்ள இந்த வேலை மூலம் அவன் தன் புதிய குடும்பத்தை ஆதரிக்க முடியும். அப்போதுதான் சோகம் ஏற்படுகிறது.

The Employer and the Employee | El empleado y el patrón

The Employer and the Employee படத்தின் இயக்குநர் மனோலோ நீட்டோ, உருகுவேயின் மான்டிவீடியோவில் 1972-ம் ஆண்டில் பிறந்தவர். The Militant (2013), The Dog Pound ஆகியவற்றால் அறியப்பட்ட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் இவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.