வாரத்துக்கு ரெண்டு – Samsung விரும்பிகளுக்கு ஜாக்பாட்!

கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், இந்தியாவில் வாரத்திற்கு இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இது சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அனைத்து செக்மெண்டிலும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருப்பதால், பயனர்களுக்கு அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப போன் வாங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கடந்த வாரம் நிறுவனம்
Samsung Galaxy
A13 மற்றும் A23 Mid Range 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக சிறந்த Galaxy F23 5G ஸ்மார்ட்போனை இந்திய பயனர்களுக்காக விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த நிலையில் மேலும் இரண்டு 5ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தனது தொகுப்பில் இணைத்துள்ளது சாம்சங்.

புதிய Samsung Galaxy A33, Samsung Galaxy 73 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் பழைய ஸ்மார்ட்போன்களில் இருந்து சிறிய மேம்படுத்தல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5G புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ33 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ73 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சியோமியின் அடுத்த ஆட்டம் – Mi Mix Fold 2 குறித்து கசிந்த தகவல்கள்!

சாம்சங் கேலக்ஸி ஏ33 சிறப்பம்சங்கள் (Samsung Galaxy A33 5G specifications)

இந்த ஸ்மார்ட்போனில் 6.4″ இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும் இந்த டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது.
Android
12 அடிப்படையிலான ONE UI 4 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு OS அப்டேட்ஸ் வழங்குவதாக சாம்சங் உறுதியளித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ33 ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் பிரத்யேக
Exynos
1280 Soc புராசஸர் உதவியுடன் இயங்குகிறது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், NFC, WiFi போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் கேமராவை பொருத்தவரை, 48MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5MP மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2MP மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 13MP மெகாபிக்சல் கேமரா திரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.20,000 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 இல் ஆண்ட்ராய்டு போனுக்கு உண்மையில் எவ்வளவு ரேம் தேவை?

சாம்சங் கேலக்ஸி ஏ73 சிறப்பம்சங்கள் (Samsung Galaxy A73 5G specifications)

இந்த ஸ்மார்ட்போனில் 6.7″ இன்ச் FHD+ Infinity-O சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வரும் இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. Android 12 அடிப்படையிலான ONE UI 4 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு OS அப்டேட்ஸ் வழங்குவதாக சாம்சங் உறுதியளித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போன், சிறந்த மிட்ரேஞ் சிப்செட்டான
Qualcomm Snapdragon
778G 5G Soc புராசஸர் உதவியுடன் இயங்குகிறது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத், NFC, WiFi போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் கேமராவை பொருத்தவரை, 108MP OIS முதன்மை சென்சார், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 5MP மெகாபிக்சல் டெப்த் சென்சார், 5MP மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா திரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் போனில் 8GB வரை ரேம் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. Virtual RAM ஆதரவுடன் 16GB வரை இதை நீட்டிக்கலாம். ஸ்டோரேஜ் மெமரியாக 256GB வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவுடன் இதனை 1TB வரை நீட்டிக்க முடியும். புதிய போன்களை வெளியிட்ட சாம்சங், அதன் விலை விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனினும் இதன் விலை ரூ.30,000க்கும் அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்:

motorola frontier: Motorola 200 MP Camera: 200 Megapixel கேமரா, 125W டர்போ சார்ஜிங், அதிரடியாய் களமிறங்கும் மோட்டோரோலா!Android 12, OIS கேமரா உடன் வெளியான இரண்டு Samsung போன்கள்!சும்மா மாஸ் காட்டும் Poco X4 Pro 5G போன் – ஒரு குறையும் இல்லங்க!

அடுத்த செய்திசியோமியின் அடுத்த ஆட்டம் – Mi Mix Fold 2 குறித்து கசிந்த தகவல்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.