"பன்மொழி அறிவு பல விதங்களில் பலன் தரும்"- ஆனந்த ரங்கம் பிள்ளை வாழ்க்கை தரும் பாடங்கள்!

பாலமாய்த் திகழ்ந்தால் பல விதங்களில் பயன் உண்டு

இந்திய மன்னர்கள் மற்றும் பிரெஞ்சு மேலதிகாரிகள் ஆகியோருக்கிடையே தனது மொழிப் புலமையால் ஒரு பாலமாக விளங்கினார். இதன் காரணமாக செங்கல்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முசாபர்சங் என்ற மன்னர் இவருக்கு ஆயிரக்கணக்கில் குதிரைகளை வழங்கினாராம்.

சிறப்பான குறிப்பேடுகள் வரலாறுப் பக்கங்களில் மதிப்பை கூட்டும்

தினசரி நாட்டு நடப்புகளை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர் ஆனந்தரங்கம் பிள்ளை. ஒன்றிரண்டல்ல, சுமார் 25 ஆண்டுகளுக்கு இப்படி எழுதி இருக்கிறார். இதன் காரணமாக அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நூல்கள் எழுதுவதால் மட்டுமல்ல நாட்குறிப்புகள் எழுதுவதாலும் வரலாறு செழுமை அடையும் என்பதை நிரூபித்தவர் இவர்.

ஆனந்த ரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள்

எளிமை பெருமை

அரசுப் பணியில் திவானாகப் பணி புரிந்தவர் இவரது தந்தை. சொந்தமாக ஒரு கப்பல் கூட வைத்திருந்தார் ஆனந்த ரங்கம் பிள்ளை. இவரது வாழ்க்கைமுறையை எளிமையானது என்று கூறிவிட முடியாது. ஆனால் இவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை. பொதுவாக பல மொழி அறிந்தவர்கள் தங்கள் மேதமையை காட்டும் விதத்தில் இலக்கிய பூர்வமாக கொஞ்சம் கரடுமுரடாக எழுதுவதுண்டு. இதில் விதிவிலக்காக இருப்பதால் ஆனந்தரங்கப் பிள்ளையின் எழுத்துக்கள் மேலும் மதிக்கப்படுகின்றன.

பன்மொழி அறிவு பல விதங்களில் பலன் தரும்

பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்தபோது அவரது இடத்தை நிரப்ப பன்மொழியறிவு கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அந்தத் தகுதிகள் பெற்ற ஆனந்தரங்கம் 1747-ல் அப்பணியில் அமர்த்தப்பட்டார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் ஆனந்தரங்கப் பிள்ளை. ​இதன் காரணமாக இவருக்கு அரசியல் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது.

ஆனந்த ரங்கம் பிள்ளை

புதிய முயற்சிகள் இறவாப் புகழ் சேர்க்கும்

ஆனந்தரங்கம் பிள்ளை வாழ்ந்த காலத்தில் நாட் குறிப்புகளைக் கொண்டு வாழ்க்கை மற்றும் நாட்டு நிகழ்வுகளைச் சொல்லும் பழக்கம் இல்லை. அந்த விதத்தில் இவரது நாட்குறிப்பை ஒருவகை புதுவகை தமிழ் இலக்கியம் என்றே கூறலாம். எனவே வரலாறு மட்டுமின்றி தமிழ் இலக்கிய உலகின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் பிரபஞ்சனின் பிரபல புதினமான ‘வானம் வசப்படும்’ எழுதப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.