புதிய சாதனை படைத்துள்ள கேஜிஎஃப்-2 ட்ரெய்லர்

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 109 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய அளவில் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள கே.ஜி.எஃப். – 2 திரைப்படத்தின் ட்ரெய்லர், ஞாயிறன்று மாலை வெளியானது. அதிரடிக் காட்சிகள் கொண்ட அந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

KGF Chapter 2: Sanjay Dutt Aka Adheera's On-Set Pics Go Viral; KGF 2 Not  For Kids, Says Yash

இதுவரை வெளியான இந்திய திரைப்பட டிரைலர்களில் அதிக பார்வையாளர்களை கடந்த திரைப்படம் என்ற  புதிய சாதனையை கே.ஜி.எஃப். – 2 நிகழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.