கல்வி ஒத்துழைப்புக்களை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அனுமதி

கல்விக்கான ஒத்துழைப்புக்களை பெறும் நோக்கில்  புரிந்துணர்வு ஒத்துழைப்புக்களை விருத்தி செய்வதற்காக எமது நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அல்லது முகவராண்மை நிறுவனங்களுக்கிடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கிணங்க, அனர்த்தங்களுக்கான மீட்சித்திறன் மற்றும் இயற்கை வளங்களின் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பான பல்நோக்கு ஆய்வுகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சல்ஃபர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொனறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய சுகாதார முயற்சிகளை ஒருங்கிணைப்புச் செய்யும் நோக்கில் பிராந்திய ஒத்துழைப்பு நிலையமொன்றை நிறுவுவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் சுகாதார சேவைகள் (தனியார்) கம்பனிக்கும் இடையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுவதற்காக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பெண்களின் மாதவிடாய் முற்றுக்குப் பின்னரான உளவியல் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய மாரிக் கருத்திட்டதிற்குரிய உருகுணு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்தின் தெற்கு சுகாதார  பொறுப்பாண்மை  என்பவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீன மாணவர்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்ற கல்வி வேலைத்திட்டத்திற்கான அனுமதி வழங்கல் மற்றும் ஊக்குவிப்புக்கான தகுந்த அங்கீகாரம் பெற்ற முகவராக Tomorrow Technology Education Service Centre இனைப் பெயரிடுவதற்கும், வலுவூட்டலுக்கு ஏற்புடைய இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் Tomorrow Technology Education Service Centre  இற்கிடையே புரிந்துணர ஏற்படுத்தப்படவுள்ளது.

இருதரப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை விருத்தி செய்தல் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் செக்குடியரசின் தோமஸ் பாடா வச்சஞ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 

இயலவு விருத்தி, ஆய்வு ஒத்துழைப்புக்கள், புத்தாக்கம் மற்றும் நீரியல்வாழ் உயிரின வளர்ப்பு உயிர்த்தொகுதி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை ரஜரட பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் நேபல்ஸ் பெட்ரிகோ II பல்கலைக்கழகத்திற்கும் இற்கிடையிலான ஒப்பந்தம் என்பவற்றை கைச்சாத்திடுவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.