பெண் கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா ராஜன் கடும் எச்சரிக்கை!

சென்னை: சென்னையில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அத்துமீறி பொதுமக்களிடம் தகராறு செய்வதும், மாமும் கேட்பதும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெருவெற்றிபெற்று அனைதுது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை வசப்படுத்தி உள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், திமுக வேட்பாளர்களில் ஏராளமான பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களும் வெற்றி பெற்று பல்வேறு பதவிகளில் அமர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பெண் கவுன்சிலர்களின் வேலையை அவர்களின் கணவர் மற்றும் பெற்றோர்களே மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சென்னையில் இரண்டு பெண் கவுன்சிலர்களின் அடாவடி செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்,  பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. இது பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சினைகளை தடுப்பதற்காகவும் இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசியவர், சென்னை பெருநகர மாநகராட்சியில் தெருவிளக்குகள் அமைப்பதற்காக அறுபத்தி ஒன்பது கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்பிற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் வெளியில் வரும் பெண்கள் கழிப்பிட வசதிகள் இல்லாமல் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. இதனை சரி செய்வதற்காக முப்பத்திமூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படும் கழிப்பறைகள் மிகவும் பாதுகாப்பானதாகவும் நவீன முறையில் இருக்கும் அதனை பராமரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

பெண்களின் பாதுகாப்பிற்காக பள்ளி கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மொபைல் டாய்லெட் வசதியை ஏற்படுத்துவதற்காக 5.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் என்எஸ்சி போஸ் ரோடு பகுதியில் மற்றும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மொபைல் டாய்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

கவுன்சிலர்கள் மீதான புகார்கள் குறித்த கேள்விக்கு பதில் கூறிய மேயர், கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அவர்களது பணி என்ன என்பது தெரியும்.  யார் கவுன்சிலரோ அவர்கள் அவர்கள் பணியை செய்ய வேண்டும்.  அதை மீறி யாரேனும் தவறாக பயன்படுத்தினாலோ அவர்களின் கணவர்கள் தவறாக வழி நடத்தினால் அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.