வெஸ்ட்மெட் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்| Dinamalar

புதுச்சேரி : வெஸ்ட்மெட் மருத்துவமனையில், வலி நிவாரண இலவச மருத்துவ முகாம் நடந்தது.புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை புதுப்பேட்டில் வெஸ்ட்மெட் மருத்துவமனை உள்ளது. இங்கு, வலி நிவாரண இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.வலி நிவாரண சீனியர் டாக்டர் மதன்பாண்டியன் சிகிச்சை அளித்தார்.

காலை 9:30 மணி முதல் மதியம் 1.௦௦ மணி வரை முகாம் நடந்தது. முகாமில், கழுத்து வலி, முதுகு வலி, குதிகால் வலி, தலைவலி, தோள்பட்டை வலி, மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி, புற்றுநோயால் ஏற்படும் வலி, நரம்பு சம்பந்தமான வலி உள்ளோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.முகாமில் பங்கேற்றவர்களுக்கு தசை மற்றும் மூட்டுகளில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இலவசமாக எடுக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.