அக்கடா துக்கடா… 3| Dinamalar

கிராமங்களில் சட்ட விரோத மதுபான கடைதுமகூரு: துமகூரின் திப்டூர் தாலுகா முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மளிகை கடை, பெட்டி கடைகளில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிராமங்களில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களே அதிகமாக இருப்பதால், வருவாயின் பெரும்பகுதி மதுபானத்துக்கு ஆண்கள் செலவழிக்கின்றனர் என பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.போலீசாரும் கண்டும் காணாமல் உள்ளனர். கிராமப்புறத்தில் விற்பனை செய்யப்படும் சட்ட விரோத மதுபானத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் தீவிர போராட்டம் நடத்தப்படும் என பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.**எண்ணெய் ஆலையை இடம் மாற்ற மனுராம்நகர்: ராம்நகர் அருகே உள்ள ஹுனசனஹள்ளி கிராமத்தில் கோழி இறைச்சியில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுப்புறத்தில் துர்நாற்றம் வீசுகிறது.சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கிராமத்தினர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் தொழிற்சாலையை இடம் மாற்ற வேண்டுமென கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.**படம்: udupi = சதுக்கத்தை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இடம்: மூட்லகட்டே, உடுப்பிசதுக்கம் புதுப்பிக்கும் பணிஉடுப்பி: உடுப்பி குந்தாபுரா அருகே மூட்லகட்டே ரயில் நிலையம் உள்ளது.

இதன் அருகில் குந்தாபுரா -தீர்த்தஹள்ளி நெடுஞ்சாலையை இணைக்கும் மூட்லகட்டே சந்திப்பு உள்ளது. இதை முன்னாள் காங்கிரஸ் எம்.பி., ஜெயராம ஷெட்டி பெயரில், அவரது குடும்பத்தினரே சொந்த செலவில் புதுப்பித்து வருகின்றனர். புதிய நிழற்குடை, நினைவு துாண் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.வரும் 10ல் புதுப்பிக்கப்பட்ட சதுக்கம் திறக்கப்பட உள்ளது.**படம்: dakshin kannada = சுத்தம் செய்யப்படாத சாக்கடைகள். இடம்: விட்லா. தட்சிண கன்னடா.வெள்ளம் ஏற்படும் அபாயம்தட்சிண கன்னடா: தட்சிண கன்னாவின் மங்களூரு அருகே உள்ள விட்லா பகுதியில் உள்ள சாக்கடைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் நிரம்பி உள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகள் நிரம்பி தண்ணீர் மேற்கொண்டு செல்ல முடியாமல் அடைத்து கொண்டுள்ளன.கோடை காலத்திலேயே அதிகாரிகள் சாக்கடையை சுத்தம் செய்து கழிவு நீர் சரளமாக செல்லும் வகையில் செய்ய வேண்டும். இல்லை என்றால் மழை காலத்தில் மழை நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

vijyapura = குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரசார வாகனத்தை கலெக்டர் சுனில் குமார் துவக்கி வைத்தார். இடம்: விஜயபுரா.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரசார வாகனம்விஜயபுரா: விஜயபுரா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சுனில் குமார் நேற்று துவக்கி வைத்தார்.இந்த வாகனம், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து குழந்தை தொழிலாளருக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும்.கலெக்டர் சுனில் குமார் கூறுகையில்,”குழந்தை தொழிலாளர்களை யாரும் பணியில் அமர்த்தக்கூடாது. விதிமுறை மீறினால் இரண்டு ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.