அவேஸ்கான், ஹோல்டர் அட்டகாச பந்துவீச்சு; கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி


சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15-வது சேஷனின் 12-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய லக்னோ அணியில் துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி 68 ஓட்டங்கள் குவித்தார். தீபக் ஹூடா 51 ஓட்டங்கள் அடித்தார்.

லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்கம் முதல் லக்னோவின் பந்துவீச்சில் திணறியபடி கொஞ்சம் கொஞ்சமாக அஓட்டங்களை குவிக்க தொடங்கியது.

அபிஷேக் சர்மா 13, கேன் வில்லியம்சன் 16 ஓட்டங்களுக்கு வெளியேறினர். ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் மட்டுமே சன் ரைசர்ஸ் அணியில் சொல்லும்படியான ஓட்டங்கள் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 18 ஓட்டங்களில் கடைசி ஓவரில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக பந்துவீசி லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 அடித்தது.

அதிசபட்சமாக அந்த அணியின் ராகுல் திரிபாதி 44 ஓட்டங்களும், நிகோலஸ் பூரன் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஆட்ட முடிவில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

லக்னோ அணி சார்பில் அவேஸ்கான் 4 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும், பாண்ட்யா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.