சுகாதார துப்புரவு சங்க கூட்டம்| Dinamalar

விழுப்புரம் : ஆரம்ப சுகாதார நிலையம் ஆர்.சி.எச்., ஒப்பந்த சுகாதார துப்புரவு நலச்சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். மாநில தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், வார விடுப்பு, பணி பாதுகாப்பு, மருத்து விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் செல்லம்மாள், நதியா, பரிமளா, ராதிகா, விஜயராணி, செங்கேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.