உயிருடன் இருக்கும்போதே வெட்டி எடுக்கப்படும் இதயம்: சீனாவில் அரங்கேறும் கொடூரம்


சீனாவில் கைதிகள் உயிருடன் இருக்கும் போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் வெட்டி நீக்கி தண்டனை நிறைவேற்றப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய விவகாரத்தை அவுஸ்திரேலிய பல்கலைக்கழக அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டு அம்பலப்படுத்தியுள்ளது.
சீனாவின் ரகசிய உறுப்பு அறுவடை வர்த்தகம் தொடர்பில் இதுவரை வெளிவராத பல முக்கிய ஆவணங்களை குறித்த ஆய்வில் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

சீனா முழுவதும் 56 மருத்துவமனைகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, அந்த ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
மரண காரணம் தொடர்பில்,சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு காத்திருக்கும் கைதிகள், மூளைச்சாவுக்கு முன்னர், உயிருடன் இருக்கும் போதே அவர்களின் இதயம் மருத்துவர்களால் வெட்டி நீக்கப்படுகிறது.
மட்டுமின்றி, உறுப்பு தானம் பெறுபவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அம்பலமாகியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு பதிலாக, உயிருடன் இருக்கும் போதே உடல் உறுப்புகளை நீக்கம் செய்து கைதிகளுக்கு மருத்துவர்களே தண்டனையை நிறைவேற்றுவதாக அந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

நாட்டின் நீதித்துறை சார்பாக மருத்துவர்களே, கைதிகளின் இதயத்தை வெட்டி நீக்கி மரண தண்டனையை நிறைவேற்றும் கொடூரம் சீனாவில் நடந்தேறுவதாக அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலும் மரண தண்டனை கைதிகளுக்கு இதுபோன்று மருத்துவமனைகளிலே தற்போது தண்டனை அளிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 56 மருத்துவமனைகளில் 71 கைதிகள் இருதயம் வெட்டி நீக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் சீனா முழுவதும் 300 மருத்துவ ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளாக சீனாவில் உடல் உறுப்பு அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் சீனா நிர்வாகம் இதை கடுமையாக மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில்,
சீனாவில் மட்டும் சில வாரங்கள் காத்திருந்தால் போதும் என்ற விளம்பரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.