அமெரிக்க அமைச்சரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க அமைச்சர் கருத்து தெரிவித்த நிலையில் அதற்கு பதிலடியாக அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இந்தியாவுக்கும் சில கருத்துகள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதை கண்காணித்து கொண்டிருக்கிறோம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்து வெளியாகியுள்ளது. இந்தியாவின் நிலவரம் குறித்து அமெரிக்காவுக்கு ஒரு கருத்து உள்ள நிலையில் அங்குள்ள நிலவரம் குறித்து குறிப்பாக அமெரிக்காவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்கும் கருத்துகள் இருக்கிறது என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Image
இதுபோன்ற விவாதங்கள் எழும்போது இந்தியா தனது கருத்துகளை கூறத் தயங்காது என்றும் ஜெய்சங்கர் கூறினார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்கக் கூடாது என அமெரிக்கா தங்கள் நாட்டு சட்டத்தை சுட்டிக்காட்டி நெருக்கடி தந்து வருவது குறித்தும் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார். வெளிநாடுகளின் செயல் அமெரிக்க சட்டங்களுக்கு முரணாக இருந்தால் அதை சரி செய்ய அந்நாடுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை சரி செய்யும் அளவுக்கு நட்பு வலுவாக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.