தவறான மற்றும் தீங்கிழைக்கும் ஊடக அறிக்கைகளால் ஏமாற வேண்டாம் என்று இராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது

சில தரப்பினரின் தவறான வழிநடத்தல் மற்றும் தவரான விளக்கங்களினால், படையினர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் முயற்சிகளை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து நாடு முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இராணுவத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள், இராணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, பல்வேறு குழுக்களும், தங்களது சொந்த நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப, இராணுவம் வன்முறையைத் தூண்டுவதற்குத் தயாராகி வருவதாகவும், தாக்குதலுக்கு முன் பயிற்சி பெறுவதாகவும் முற்றிலும் பொய்யான அடிப்படையற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது அவதானிக்கப்படுகிறது. ஆயுதப்படையைச் சேர்ந்த எவரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும், இவ்வாறான அறிக்கைகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகவும், என்பதுடன் இந்த செயற்பாடுகளில் இன்றுவரை ஒரு சிப்பாய் கூட ஈடுபடவில்லை என்பது அறியத்தக்க விடயமாகும்.

சமூக வலையதளங்களில் பரவிவரும் இத்தகைய தீங்கிழைக்கும் பிரச்சாரங்களில், ‘இராணுவ வைத்தியசாலையில் ஊழல் குற்றச்சாட்டு’ மற்றும் இராணுவத்தின் கட்டமைக்கப்பட்ட மற்றும் நன்கு நிறுவப்பட்ட இராணுவ ஆலோசனை குழுக்கள் அல்லது நிறுவப்பட்ட ஒப்பந்த நடைமுறைகள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்களின் தவறான அறிக்கைகள் ஆகியவை அடங்கும். இத்தகைய தவறான மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கைகளை இராணுவம் கடுமையாக மறுக்கிறது.

அனைவருக்கும் அறிந்தவகையில் ஆயுதப்படையினர் கடந்த சில நாட்களில், அந்த அமைதியான போராட்டக்காரர்கள் அல்லது அமைப்புக்களில் எதிலும் தலையீடு இல்லாமல் மகத்தான மற்றும் விலைமதிப்பற்ற சேவைகள் மூலம் இந்த நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்திய ஒரு அமைப்பின் ஒழுக்கமான உறுப்பினர்களாக அவர்கள் நாட்டின் நலன்களுக்கு எதிராகவும் செயல்படவில்லை.

இராணுவத்தின் அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த மோசமான நடவடிக்கைகளை இராணுவம் மிகவும் வலுவாகவும் திட்டவட்டமாகவும் நிராகரிப்பதோடு, அதே சமயம் இந்த நாட்டின் பிரஜையாக உணர்வும், சரியான எண்ணமும் கொண்ட குடிமக்களை, சிப்பாய்கள் மீது முழு நம்பிக்கை வைக்குமாறு வலியுறுத்துகிறது. தற்போது பணியாற்றும் சிப்பாய்கள் அதிக பயிற்சி பெற்றவர்களாகவும், தொழில் ரீதியில் தகுதியுடையவர்களாகவும், எந்தவொரு பாதுகாப்புச் சவாலையும் எதிர்கொள்ள முடியுமானவர்களாக இருக்கிறார்கள் என்பதோடு தற்போதைய சூழ்நிலையில் பொலிஸாரால் அழைக்கப்பட்டால் மட்டுமே பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேபோல், இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக அனைத்து முகாம்களிலும் நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதுடன் இது ஊடகங்களில் சில பிரிவினர்களால் குறிப்பிடுவது போல் வன்முறைக்கான புதிய எந்தவொரு முன்னெடுப்பும் அல்ல.

அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க, நாட்டையும் அதன் மக்களையும் முழு நேரமும் பாதுகாப்பதில் இராணுவம் உறுதியாக இருப்பதால், குறித்த திட்டமிட்ட சூழ்ச்சிகள் மற்றும் துரோக செயல்களால் பொதுமக்கள் தூண்டப்படவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இலங்கை இராணுவம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.