ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல! திருமாவளவன் கண்டனம்

சென்னை: ஆளுநரின்  கறுப்புக்கொடி வீசியது ஏற்புடையதல்ல, அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல. ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தருமபுர ஆதினம் விழாவுக்கு வருகை தந்த  ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல், கருப்பு கொடி வீசியதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் காவல்துறை செயலிழந்து விட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்,  ஆளுநரின்  வாகனம் மீது கறுப்புக்கொடி வீசியது ஏற்புடையதல்ல. அறவழிப்போராட்டத்தில் இதுபோன்ற செயல்கள் வரவேற்ப்புடையதல்ல என்று விசிக தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரியலூரில் தொல். திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், “ஆளுநரின் கார் மீது கறுப்புக் கொடி வீசியது ஏற்புடைய செயல் அல்ல.  ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. ஆனால், இதற்காக முதல்வர் பதவிவிலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கை”/ 11 மசோதாக்களை கிடப்பில் போடுவது என்பது தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாக பார்க்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.