இந்தியாவுக்கு இந்தோனேசியா கொடுத்த ஷாக்.. சாமானியர்கள் பெரும் கவலை..!

இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் சமையல் எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் 28ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளது.

இதனால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவு குறையலாம். இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் டூ ரூ.3 லட்சம்.. குறுகிய காலத்தில் அதிக லாபத்தை கொடுத்த டாடா பங்கு..!

இந்தியா வருடத்திற்கு அதன் மொத்த தேவையில் கிட்டதட்ட 45% , இந்தோனேசியாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது

நடுத்தர மக்களுக்கு கடும் பாதிப்பு

நடுத்தர மக்களுக்கு கடும் பாதிப்பு

ஆக இந்தோனேசியாவின் தடை காரணமாக இந்தியாவில் விலை கடுமையான உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சன் பிளவர் ஆயில் விலையானது கடுமையான உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் தற்போது பாமயில் விலையும் அதிகரித்தால், இது நடுத்தர மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

என்ன காராணம்?

என்ன காராணம்?

என்ன காரணம்? ஏன் இந்த திடீர் விலையேற்றம், நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை சூழ்நிலைக்கு மத்தியில் உள்நாட்டிலேயே பாமாயிலின் விலையானது கடுமையான உச்சத்தினை எட்டியுள்ளதாகவும், ஆக அங்கு விலையேற்றத்தினை கட்டுக்குள் கொண்டு வரவும் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீடியா தகவல்கள் கூறுகின்றன. இது விலையை கட்டுக்குள் கொண்டு வர பயன்படும் என்றும், இதன் காரணமாக அந்த நாடு இப்படி ஒரு உத்தரவினை போட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு இறக்குமதி?
 

எவ்வளவு இறக்குமதி?

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 13 – 13.5 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் சுமார் 63% அதாவது 8 – 5.5 மில்லியன் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த 8 – 8.5 மில்லியன் டன்னில், 45% இந்தோனேசியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமிருக்கும் எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதி மலேசியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

 மே மாதத்தில் இருந்து சப்ளை சரியும்

மே மாதத்தில் இருந்து சப்ளை சரியும்

மே மாதம் முதல் இந்தோனேசியாவில் இருந்து சப்ளை செய்யப்படும் பாமாயிலானது, மாதம் 3,00,000 – 3,25,000 டன்னாக குறைக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. தகவல்கள் படி இறக்குமதி குறைக்கப்பட்டாலும், விலையானது கடுமையான உச்சத்தினை எட்டலாம். ஏற்கனவே சன்பிளவர் ஆயில் இறக்குமதியும் தடைப்பட்டுள்ள இந்த நேரத்தில், இதுவும் குறைந்தால் விலை கடுமையாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்பிளவர் ஆயில் இறக்குமதி சரிவு

சன்பிளவர் ஆயில் இறக்குமதி சரிவு

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு இந்தியாவில் சன்பிளவர் எண்ணெய் இறக்குமதி மாதத்திற்கு, 2,00,000 – 2,50,000 டன்னில் இருந்து, 1,00,000 டன்னாக குறைந்துள்ளது. இதனால் விலையானது கடுமையாக அதிகரித்துள்ளது. ஆக இப்படி ஒரு நிலையில் இந்தோனேசியாவும் இப்படி ஒரு முடிவெடுத்தால், அது கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்று சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் தலைவர் பிவி மேத்தா எச்சரித்துள்ளார்.

 பாமாயில் இறக்குமதியாளர்கள்

பாமாயில் இறக்குமதியாளர்கள்

கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி மலேசியா, அடுத்தபடியாக இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், நேபாள் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதில் மலேசியா மற்றும் இந்தோனேசியா தான் டாப் இறக்குமதியாளர்களாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indonesia plans to ban on palm oil exports starting April 28: it may push oil prices in india

Indonesia plans to ban on palm oil exports starting April 28: it may push oil prices in india/இந்தியாவுக்கு இந்தோனேசியா கொடுத்த ஷாக்.. சாமானியர்கள் பெரும் கவலை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.