ராஷ்மிகாவை முற்றுகையிட்ட ரசிகர்கள்

மும்பை: புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா. இந்த படத்தால் ராஷ்மிகா, பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார். தற்போது இந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்காக மும்பையில் தங்கியுள்ள அவர், நேற்றுமுன்தினம் அங்குள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது ராஷ்மிகாவை அடையாளம் கண்டுகொண்ட மும்பை ரசிகர்கள், அவரை சூழ்ந்துகொண்டனர். ராஷ்மிகாவுடன் செல்பி எடுக்க அவர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து செல்ல முடியாமல் ராஷ்மிகா அவதிப்பட்டார். இதையடுத்து ரெஸ்டாரென்ட் ஊழியர்கள் வந்து கூட்டத்திலிருந்து ராஷ்மிகாவை பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.