ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40 சதவீதமாக அறிவித்தது. எனவே வங்கி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் உயரும் என தமிழ் குட்ரிட்டர்ன்ஸில் தெரிவித்து இருந்தோம்.

அதை உறுதி செய்யும் விதமாக ஐசிஐசிஐ வங்கி தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு.. கவனிக்க வேண்டிய ஐசிஐசிஐ வங்கி!

 எவ்வளவு உயர்வு?

எவ்வளவு உயர்வு?

ஆர்பிஐ 0.40 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தாலும், அந்த நன்மையை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் 0.25 சதவீதம் மட்டும் ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

எப்போது முதல்?

எப்போது முதல்?

ஐசிஐசிஐ வங்கியின் இந்த பிக்சட் டெபாசிட் வட்டி விகித உயர்வு மே 5-ம் தேதி முதலே அமலுக்கு வருகிறது. எனவே இன்று முதல் ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.

பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம்:
 

பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம்:

7 – 14 நாட்கள் : 2.75%
15 – 29 நாட்கள் : 2.75%
30 – 45 நாட்கள் : 3.00%
46 – 60 நாட்கள் : 3.00%
61 – 90 நாட்கள் : 3.25%
91 – 120 நாட்கள் : 3.50%
121 – 150 நாட்கள் : 3.50%
151 – 184 நாட்கள் : 3.50%
185 – 210 நாட்கள் : 3.75%
211 – 270 நாட்கள் : 3.75%
271 – 289 நாட்கள் : 4.00%
1 ஆண்டு – 389 நாட்கள் : 4.50%
390 நாட்கள் – 15 மாதம் : 4.50%
15 மாதம் – 18 மாதம் : 4.60%
18 மாதம் – 2ஆண்டு : 4.65%
2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டு : 4.75%
3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டு : 4.80%
5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டு : 4.80%

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்:

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்:

7 – 14 நாட்கள் : 2.75%
15 – 29 நாட்கள் : 2.75%
30 – 45 நாட்கள் : 3.00%
46 – 60 நாட்கள் : 3.00%
61 – 90 நாட்கள் : 3.50%
91 – 120 நாட்கள் : 3.50%
121 – 150 நாட்கள் : 3.50%
151 – 184 நாட்கள் : 3.50%
185 – 210 நாட்கள் : 3.75%
211 – 270 நாட்கள் : 3.75%
271 – 289 நாட்கள் : 4.00%
1 ஆண்டு – 389 நாட்கள் : 4.50%
390 நாட்கள் – 15 மாதம் : 4.50%
15 மாதம் – 18 மாதம் : 4.60%
18 மாதம் – 2ஆண்டு : 4.65%
2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டு : 4.75%
3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டு : 4.80%
5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டு : 4.80%

குறைந்த கால டெபாசிட்

குறைந்த கால டெபாசிட்

ரெப்போ வட்டி விகிதம் உயரும் போது, பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயருகிறது என்றால் குறைந்த கால டெபாசிட் திட்டங்களுக்குத் தான் முதலில் மாறும். எனவே புதிதாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்ய இருப்பவர்கள், பழைய டெபாசிட்டை புதுப்பிக்க இருப்பவர்கள் குறைந்த கால முதலீட்டைத் தேர்வு செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ICICI Bank Increases Fixed Deposit Interest Rates after RBI Rate Hike

ICICI Bank Increases Fixed Deposit Interest Rates after RBI Rate Hike | ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Story first published: Thursday, May 5, 2022, 15:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.