மஹிந்திரா குரூப் விளக்கம்: ஆட்டோமொபைல் நிறுவனத்தை ந3 ஆக உடைக்க எந்த திட்டமும் இல்லை..!

இந்திய ஆட்டோமொபைல் துறை வேகமாகவும் அதேவேளையில் பல பரிவுகளில் விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில் டாடா மோட்டார்ஸ் உட்படப் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய முதலீட்டை ஈர்ப்பதற்கும், விரிவாக்கம் செய்வதற்கும் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்தது.

இந்த வரிசையில் தற்போது மஹிந்திரா குரூப்-ம் தனது ஆட்டோமொபைல் நிறுவனத்தை 3 பிரிவுகளாக உடைக்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மஹிந்திரா குழுமம் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது.

714 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 0.84% உயர்வு..!

மஹிந்திரா குரூப்

மஹிந்திரா குரூப்

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாக விளங்கும் மஹிந்திரா குரூப், தனது மொத்த வருவாயில் சுமார் 55 சதவீத பங்களிப்பை அளிக்கும் தனது முக்கியமான ஆட்டோமொபைல் வணிகத்தை மூன்றாகப் பிரிப்பதற்கான மறுகட்டமைப்பு பணிகளைத் துவங்கியுள்ளது என தகவல் வெளியான நிலையில் தற்போது மறுத்துள்ளது.

 3 பிரிவுகள்

3 பிரிவுகள்

மஹிந்திரா குரூப்-ன் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்திரா குரூப் தனது ஆட்டோமொபைல் வர்த்தகத்தை எலக்ட்ரிக் வாகனம், டிராக்டர் மற்றும் பயணிகள் வாகனம் (PV) வணிகங்கள் என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கும் முயற்சியில் உள்ளது என செய்திகள் வந்த நிலையில், இன்று மாலை மஹிந்திரா குழுமம் நிறுவனத்தை உடைக்க எவ்விதமான திட்டமும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது. 

 

 அறிவிப்பு
 

அறிவிப்பு

இந்த நிறுவனங்களும் தற்போது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் உள்ளது. இந்த 3 தனித்தனி நிறுவனங்களாக உடைக்கும் திட்டத்தை மஹிந்திரா குழுமம் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இந்தச் செய்தி சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

தற்போது எலக்ட்ரிக் வாகனம், டிராக்டர் மற்றும் பயணிகள் வாகனம் (PV) வர்த்தகங்கள் அனைத்தும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் ஒன்றாக இணைந்துள்ளது. தற்போது வர்த்தகத்தைத் தனித்தனியாகப் பிரிக்கும் போது தனிப்பட்ட நிர்வாகம், கவனம், முதலீடு ஆகியவற்றின் மூலம் வர்த்தகம் விரிவாக்கம் அடையும்.

 எலக்ட்ரிக் வாகன பிரிவு

எலக்ட்ரிக் வாகன பிரிவு

மஹிந்திராவின் எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தில் புனேவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையுடன், இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஆட்டோமொபைல் பினின்ஃபரினா உடன் இணைந்து ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தை உருவாக்க முடியும்.

 டிராக்டர் பிரிவு

டிராக்டர் பிரிவு

விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர் பிரிவு மற்றொரு தனி நிறுவனமாக மாற உள்ளது. 2007 இல் மஹிந்திரா குரூப், பஞ்சாப் டிராக்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, இந்தப் பிரிவு 43% சந்தை பங்கைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக உள்ளது. மஹிந்திராவின் ஆட்டோமொபைல் வணிகத்தில் இது மிகவும் லாபகரமானது.

 பயணிகள் வாகன பிரிவு

பயணிகள் வாகன பிரிவு

ஏற்கனவே பயணிகள் வாகன பிரிவில் மஹிந்திரா சமீபத்தில் அறிவித்த Thar, XUV700 போன்றவை மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் அடுத்தது எலக்ட்ரிக் வாகன பிரிவிலும் வெற்றிப் பாதையை மஹிந்திரா உருவாக்க உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 0.78 சதவீதம் உயர்ந்து 905.40 ரூபாயாக உள்ளது.

புதிய உச்சம்

புதிய உச்சம்

இந்த வர்த்தக உடைப்பு மூலம் மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோமொபைல் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்ட உள்ளது. இதன் மூலம் விரைவில் புதிய முதலீட்டை ஈர்த்து உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anand Mahindra owned Mahindra Group plans to split automobile business into 3 separate units

Anand Mahindra owned Mahindra Group plans to split the automobile business into 3 separate units மூன்றாக உடையும் மஹிந்திரா குரூப்.. ஆனந்த் மஹிந்திரா திட்டம் இதுதான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.