ஐ.பி.எல் ஆரஞ்சு கேப்; ஒரு குழந்தைக்கு எவ்வளவு சந்தோஷம் பாருங்க… வீடியோ!

IPL 2022 TAMIL NEWS: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆஃப் சுற்று நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு நடந்த 63வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதன்படி களமிறங்கி விளையாடி ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 41 ரன்களும், படிக்கல் 39 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து 179 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி விளையாடிய லக்னோ அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மிடில்-ஆடர் வீரர் தீபக் ஹூடா அரைசதம் அடித்து இருந்தாலும், நிர்ணக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆரஞ்சு தொப்பியுடன் விளையாடும் பட்லர் மகள்…

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் வீரர் ஜோஸ் பட்லர் தொடர்ந்து வசப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 625 ரன்களை குவித்துள்ளார். இதில் அவர் விளாசிய 3 சதங்களும் உள்ளடங்கும்.

இந்நிலையில், நேற்றை ஆட்டத்திற்கு பிறகு பட்லர் தனது மகளுடன் விளையாடும் வீடியோவை ராஜஸ்தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக தளத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வீடியோவில் பட்லரின் மகள் ஜார்ஜியா அவரது ஆரஞ்சு தொப்பியுடன் விளையாடுவதைக் காண முடிந்தது. மேலும் தொப்பியை தன்வசப்படுத்திய இருந்த ஜார்ஜியா பட்லர் கேட்டபோது கொடுக்கமால் அங்கிருந்து ஓடி விளையாடி மகிழ்ச்சியடைகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.