வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ.. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆர்பிஐ செய்யப்போவது இதை தான்..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இப்புதிய வட்டி விகிதம் மே 15 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி.

3 மாத குறைந்த விலையில் இருந்து தங்கம் விலை ஏற்றம்.. நல்ல வாய்ப்பு தான்..!

இப்புதிய வட்டி உயர்வின் எஸ்பிஐ வங்கியின் அனைத்து கடனுக்குமான வட்டி விகிதம் அதிகரிக்கும். மேலும் ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களின் ஈஎம்ஐ அதிகரிக்கும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் MCLR வட்டி விகிதம் அதிகரிக்கும் போது நிர்ணயிக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். இதன் வாயிலாகச் சில்லறை வணிகம், MSME மற்றும் கார்ப்பரேட் கடன்கள் புதுப்பித்தலுக்கு வரும்போது வட்டி விகிதம் அதிகரிக்கும். புதிய கடன்கள் அனுமதிக்கப்படும் போது கார்ப்பரேட்களுக்கான வட்டிச் செலவும் அதிகரிக்கும்.

10 அடிப்படை புள்ளிகள்

10 அடிப்படை புள்ளிகள்

கடந்த மாதமும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது எம்சிஎல்ஆரை 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஆர்பிஐ தனது நாணய கொள்கையில் 40 அடிப்படை புள்ளிகளை அதிகரித்த நிலையில் எஸ்பிஐ அடுத்தடுத்து இரு முறை வட்டியை அதிகரித்துள்ளது.

ப்ளோடிங் வட்டி விகிதம்
 

ப்ளோடிங் வட்டி விகிதம்

தற்போது வங்கி துறையில் பெரும்பாலான கடன்கள் ப்ளோடிங் வட்டி விகிதத்தில் கணக்கிடப்படும் நிலையில், எஸ்பிஐ வங்கியின் இப்புதிய இரு வட்டி விகித உயர்வும் உடனடியாக அமலாக்கம் செய்யப்படும். இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த மாதம் முதலே கூடுதலான வட்டி அல்லது ஈஎம்ஐ தொகையைச் செலுத்த வேண்டி வரும்.

 நாணய கொள்கை கூட்டம்

நாணய கொள்கை கூட்டம்

மேலும் ஆர்பிஐ அடுத்த இரு நாணய கொள்கை கூட்டத்தில் தனது ரெப்போ விகிதத்தைக் கொரோனாவுக்கு முந்தைய அளவான 5.15 சதவீதத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறுகிறது. சிறு நகரங்களில் உணவு பொருட்கள் விலையும், பெரு நகரங்களில் எரிபொருள் விலையும் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா – உக்ரைன் போர்

கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாத இந்தியாவுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் மிகப்பெரிய பாதிப்பை பணவீக்கத்தின் வாயிலாகவும், சப்ளை செயின், எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவை மூலம் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI hikes 10bps interest rates; SBI Research says RBI may raise repo rate to pre-pandemic level by August

SBI hikes 10bps interest rates; SBI Research says RBI may raise repo rate to pre-pandemic level by August வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்பிஐ.. ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆர்பிஐ செய்யப்போவது இதை தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.