சிவலிங்க விவகாரம்: “நல்லவேளை பாபா அணு ஆராய்ச்சி மையத்தை தோண்டவில்லை!" – மஹுவா மொய்த்ரா

பா.ஜ.க-வின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா முக்கியமானவர். அவ்வப்போது பா.ஜ.க-வின் குறைகளை நாடாளுமன்றத்திலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதனால் அடிக்கடி விமர்சனத்துக்கும் ஆளாகுவார்.

மஹுவா மொய்த்ரா

இந்த நிலையில், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது எனத் தொடரப்பட்ட வழக்கில், `மசூதிக்குள் சிவ லிங்கம் இருப்பின் அது பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரம் முஸ்லிம்களும் தொழுகை நடத்துவதை நிறுத்த வேண்டாம்!’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, “அடுத்து அகழாய்வு செய்யும் பட்டியலில் பாபா அணு ஆராய்ச்சி மையம் இல்லை என்று நம்புகிறேன்….” எனப் பதிவிட்டிருக்கிறார்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் புகைப்படத்தை இவர் மட்டுமல்லாமல், இவருக்கு முன்னரே திரிணாமுல் மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கார் ட்விட்டரில் பகிர்ந்து, “பாபா அணு ஆராய்ச்சி மையம், மிகப்பெரிய சிவலிங்கமாக பக்தர்களால் விரைவில் அறிவிக்கப்படும்!” எனப் பதிவிட்டிருந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்களின் இத்தகைய ட்விட்டர் பதிவுகளுக்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மஹுவா மொய்த்ராவின் ட்வீட்டை சுட்டிக்காட்டி `காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவலிங்கத்தையும், இந்து மத நம்பிக்கையையும் படித்தவர்கள் இப்படி கேலி செய்வது வருத்தமளிக்கிறது. கடந்த சில தினங்களாக சிவலிங்கமும், இந்து மத நம்பிக்கையும் விமர்சிக்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.