மே 22ந்தேதி முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்தம்! திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

திருப்பூர்: அதிகரித்து வரும் நூல் உயர்வை கட்டுப்படுத்த வலியறுத்தி 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்திய ஜவுளி விற்னையாளர்கள், வரும்  22ந்தேதி முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர்.

நூல் விலை வரலாறு காணாத அளவில் 480 ரூபாய்  ஆக அதிகரித்துள்ளது.. இதனால், தமிழ்நாட்டில், பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கரூர் உள்பட சில மாவட்டங்களில் நூல் மற்றும் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சகணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில்  கடந்த 16, 17 (மே மாதம்) ஆகிய இரு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 22-ந்தேதி (மே)  முதல் ஜூன் 5-ந்தேதி வரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திருப்பூர், பல்லடம், சோமனூர், அவினாசி, மங்கலம், தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

நூல் விலை உயர்வை கண்டித்து, நடந்த ஆலோசனைக்கு பிறகு கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  நூல் விலை உயர்வுக்கு ஏற்ப துணிகளின் விலையை உயர்த்த முடிவதில்லை. இதனால் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், பஞ்சு ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கோரியும் வருகிற 22-ந் தேதி முதல் ஜூன் மாதம் 5-ந் தேதி வரை 15நாட்கள் வரை முழுமையாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்காத நிலை ஏற்படும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.