மாருதி சுசூகி புதிய தொழிற்சாலை: 75% வேலைவாய்ப்பு ஹரியானா மக்களுக்கு மட்டுமே..!!

மாருதி சுசூகி நிறுவனம் புதிதாக அமைக்கும் 800 ஏக்கர் பிரம்மாண்ட தொழிற்சாலையில் ஹரியானா மாநில அரசின் வேலை ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்க ஒப்புக்கொண்டது.

இதற்காக ஹரியானா மாநிலம் சில முக்கியமான சலுகைகளையே அளித்த பின்பு இம்மாநில வேலைவாய்ப்புக் கொள்கை ஏற்றுள்ளது மாருதி சுசூகி.

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் மோசடி.. முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஹரியானா

ஹரியானா

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் தொழில்துறை அமைச்சர் துஷ்யந்த் சிங் சவுதாலா ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டத்தில் சில மாற்றங்களுக்கு இரு தரப்பு ஒப்புதல் உடன் இம்மாநிலத்தின் வேலைவாய்ப்பு கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது மாருதி சுசூகி.

75 சதவீதம் வேலைவாய்ப்பு

75 சதவீதம் வேலைவாய்ப்பு

ஹரியானா மாநிலத்தின் வேலைவாய்ப்புக் கொள்கை படி மாருதி சுசூகியின் 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக உள்ள தொழிற்சாலையில் 75 சதவீதம் வேலைவாய்ப்புகளை ஹரியானா மாநில மக்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

சம்பள கட்டுப்பாடு
 

சம்பள கட்டுப்பாடு

மாதம் ரூ. 30,000 வரை ஊதியம் பெறும் தொழிலாளர் பிரிவுக்கு மட்டுமே இந்த 75% ஒதுக்கீடு பொருந்தும் என்று மாருதி சுசூகியும் ஹரியானா அரசும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு இதன் அளவீடு ரூ.50,000 ரூபாயாக இருந்தது நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது.

வாழ்ந்த காலம்

வாழ்ந்த காலம்

இதேபோல் ஹரியானா மாநிலத்தில் 5 வருடம் இருந்தாலே சொந்த மாநிலத்தவர் என ஏற்றுக்கொள்ளப்படும், முன்பு இதன் அளவு 15 வருடமாக இருந்தது. இந்த மாற்றத்திற்கும் ஹரியானா மாநில அரசு ஏற்றுக்கொண்டு 800 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

மாருதி சுசூகி இந்தியா தனது 4வது உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா மாநிலத்தில் சோனிபட் மாவட்டத்தில் ரூ. 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது. இதோடு சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இதே பகுதியில் இரு சக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1,466 கோடியை முதலீட்டில் அமைக்க உள்ளது. இவ்விரு தொழிற்சாலையில் சுமார் 13,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Maruti Suzuki accepts Haryana govt’s 75 percent job quota policy with concessions

Maruti Suzuki accepts Haryana govt’s 75 percent job quota policy with concessions மாருதி சுசூகி புதிய தொழிற்சாலை: 75% வேலைவாய்ப்பு ஹரியானா மக்களுக்கு மட்டுமே..!!

Story first published: Friday, May 20, 2022, 17:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.