எலான் மஸ்க் விடுக்கும் அடுத்த எச்சரிக்கை.. கடுப்பான ஜோ பைடன்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் வகையிலேயே பேசி வருகிறார், இதேபோல் எலான் மஸ்க்-ஐ சுற்றி அடுத்தடுத்துப் பிரச்சனை உருவாகி வருகிறது.

சமீபத்தில் எலான் மஸ்க் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்துப் பேசிய கருத்துக்கள் அமெரிக்க நிறுவனங்களைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-ஐ காண்டாக்கியுள்ளார்

டெஸ்லா ஊழியர்கள் பணிநீக்கம்.. எலான் மஸ்க் எடுத்த திடீர் முடிவு..!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் அமெரிக்கா பொருளாதாரம் குறித்து மிகவும் மோசமான எண்ணம் கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார், இந்தக் கருத்தை அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டு உள்ள வர்த்தகச் சரிவை அடிப்படையாக வைத்துத் தெரிவித்துள்ளார்.

கார் மற்றும் டிரக்

கார் மற்றும் டிரக்

2 வருட கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பின்பும் அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் கார் மற்றும் டிரக்குகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பதாக அனைத்து முன்னணி நிறுவனங்களும், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வாகனங்களுக்கான டிமாண்ட் Sky high ஆக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கார் விற்பனை
 

கார் விற்பனை

ஆனால் மே மாதம் அமெரிக்காவில் கார் விற்பனை வெறும் 12.68 மில்லியனாக மட்டுமே உள்ளது, இது கொரோனாவுக்கு முன்பு 17 மில்லியனாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் பணவீக்கம், சப்ளை செயின் மதிப்பு, விலை உயர்வு, சிப் தட்டுபாடு ஆகியவை முக்கியக் காரணமாக உள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரம்

அமெரிக்கப் பொருளாதாரம்

இந்த விற்பனை அளவை மையமாக வைத்து எலான் மஸ்க் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து “super bad feeling” இருப்பதாகத் தெரிவித்தார். இவர் சொல்வதும் சரி தான் வர்த்தகம் பொருளாதாரம் சிறப்பாக இருப்பின் மக்கள் வட்டி விகிதம் உயர்ந்தாலும் அதிகளவில் செலவு செய்வார்கள் இதனால் வாகன விற்பனையும் அதிகமாக இருக்கும்.

ஜோ பைடன்

ஜோ பைடன்

எலான் மஸ்க் கருத்தை அமெரிக்க ஜோ பைடன் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது, ஆட்டோமொபைல் துறைக்கு அரசு பல சலுகை அளித்துள்ளது, அதேபோல் பல நிறுவனங்கள் சிப் முதல் சப்ளை செயின் வரையில் கூடுதலாக முதலீடு செய்துள்ளது எனக் கூறிவிட்டு, எலான் மஸ்க்-ன் நிலா பயணத்திற்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

உலகளவில் பொருளாதாரம் பணவீக்கத்தில் துவங்கி ரஷ்யா – உக்ரைன் போர் வரையில் பல காரணங்களால் மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகள் தங்களது பல வகையில் இந்தச் சரிவை சமாளித்து வருகிறது.

வல்லரசு நாடுகள்

வல்லரசு நாடுகள்

குறிப்பாக வல்லரசு நாடுகளின் நிலை பயமுறுத்தும் வகையில் தான் உள்ளது, ஆனால் இதை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் உள்ளது எனப் பல பொருளாதார வல்லுனர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon musk super bad feeling about US economy, Joe Biden reacted

Elon musk super bad feeling about US economy, Joe Biden reacted எலான் மஸ்க் விடுக்கும் அடுத்த எச்சரிக்கை.. கடுப்பான ஜோ பைடன்..!

Story first published: Sunday, June 5, 2022, 12:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.