144 தடை உத்தரவு; இஸ்லாமாபாதில் அமல்| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து,இஸ்லாமாபாதில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார்.

புதிய பிரதமராக, பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இந்நிலையில், இம்ரான் கானை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளதாக, பாக்., முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்தார். இதையடுத்து இம்ரானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ”இம்ரானுக்கு ஏதாவது நேர்ந்தால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகவே கருதப்படும். விளைவுகள் விபரீதமாக இருக்கும்,” என, இமfரானின் உறவினர் ஹஸான் நியாசி எச்சரித்தார்.

இந்நிலையில் இஸ்லாமாபாதின் பானி காலா பகுதியில உள்ள வீட்டுக்கு இம்ரான் கான் நேற்று வருவதாக கூறப்பட்டது.இதையடுத்து இஸ்லாமாபாத் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்ரான் வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.