விரைவில் எஸ்-400.. செம அப்டேட் கொடுத்த ரஷ்யா..!

இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் கடந்த 5 மாதத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நீண்ட கலாமாக இரு நாடுகள் மத்தியில் ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் தொடர்பு உள்ளது.

இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா?

1947 முதல் இந்தியா – ரஷ்யா மத்தியிலான நட்பு மற்றும் வர்த்தகத் தொடர்புகள் இருக்கும் நிலையில் தற்போது 2018ல் இரு நாடுகள் மத்தியில் நடந்த முக்கியமான ஒப்பந்தம் குறித்த முக்கியமான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

இந்தியா-ரஷ்யா

இந்தியா-ரஷ்யா

இந்தியா – ரஷ்யா மத்தியிலான நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், S-400 ட்ரையம்ஃப் ஏர் டிபென்ஸ் ஏவுகணைகளின் உற்பத்தி பணிகளைச் சிறப்பாகவும், வேகமாகவும் நடந்து வருகிறது. இதன் மூலம் குறித்த காலகட்டத்திற்குள்ள S-400 ஏவுகணைகள் டெலிவரி செய்யப்படும் என்று கூறினார்.

S-400 சிஸ்டம்

S-400 சிஸ்டம்

ஏர் டிபென்ஸ் மிசைல் பிரிவில் மிகவும் சிறந்த வகையான S-400 சிஸ்டம் குறித்த டெனிஸ் அலிபோவ்-வின் டெலிவரி அப்டேட், இந்திய பாதுகாப்பு துறைக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. 2018 அக்டோபரில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 5 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்காக 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது.

கச்சா எண்ணெய்
 

கச்சா எண்ணெய்

இந்திய ரஷ்யா மத்தியில் நீண்ட கால நட்புறவு இருக்கும் நிலையில், உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா புடின் அரசுக்கு மிகவும் முக்கியமான வர்த்தகக் கூட்டணியாகத் திகழ்கிறது. ரஷ்யா உலக நாடுகளிடம் இழந்து வரும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை இந்தியாவை வைத்து தான் ஈடு செய்து வருகிறது.

ரஷ்யா 2வது இடம்

ரஷ்யா 2வது இடம்

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியா தற்போது அதிகக் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் ரஷ்யா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வளர்ச்சி கடந்த 5 மாதத்தில் நடந்தது என்றால் மிகையில்லை.

75வது சுதந்திர தினம்

75வது சுதந்திர தினம்

2022 ஆம் ஆண்டில் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இதே வருடம் இந்தியா-ரஷ்யா மத்தியிலான நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடப்படுகிறது கூடுதல் சிறப்பு.

1947 முதல்...

1947 முதல்…

இந்தியாவில் 1950-1960 களில் சோவியத் நாடுகளின் உதவியுடன் பல தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுமானம், 1958 இல் மும்பையில் ஐஐடி நிறுவப்பட்டது, 1971 ஆம் ஆண்டு அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தம் மூலம் 1984 இல் “சோயுஸ் டி-11” விண்கலம், கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானம், AK-203 துப்பாக்கிகள் உற்பத்தி, போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரம்மோஸ் மற்றும் பிற ஏவுகணைத் திட்டங்கள் எனப் பலவற்றை ரஷ்யா உதவியுடன் இந்தியா செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

S-400 defence missile system delivery will be on date, says Denis Alipov

S-400 defence missile system delivery will be on date, says Denis Alipov விரைவில் எஸ்-400.. செம அப்டேட் கொடுத்த ரஷ்யா..!

Story first published: Monday, June 13, 2022, 15:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.