5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்… 2வது நாள் முடிவில் ஏலத்தொகை எத்தனை கோடி?

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்றைய 2-வது நாளில் 4 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து முதல் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.1,49,454 கோடி அளவுக்கு ஏலம் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 3வது நாளாக இன்றும் ஏலம் தொடர உள்ள நிலையில் இன்றைய முடிவில் ஏலத் தொகை எவ்வளவு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரண்டு மடங்கு அதிகம்

நேற்று இரண்டாவது நாளின் முடிவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இருந்து ரூ.1,49,454 கோடி மதிப்பிலான ஏலத்தொகையை அரசாங்கம் பெற்றுள்ளது, இது 2021 ஆம் ஆண்டில் 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் பெறப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

4ஜி அலைக்கற்றை

4ஜி அலைக்கற்றை

மார்ச் 2021ஆம் ஆண்டில் நடந்த 4ஜி அலைக்கற்றை ஏலத்தின் மூலம் ரூ.77,814.80 கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு ஏலம் இரண்டு நாட்களில் முடிவடைந்தது. இருப்பினும், 5ஜி அலைக்கற்றை ஏலம் நீண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு ஏலங்களிலும் ஏலத்தின் முதல் நாளிலேயே கணிசமான அளவு ஏலம் எடுக்கப்பட்டது.

முதல் இரண்டு நாள் ஏலம்
 

முதல் இரண்டு நாள் ஏலம்

5ஜி ஏலத்தில், முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம் போனது. இரண்டாவது நாளில், ஏறக்குறைய ரூ.4,000 கோடி மதிப்பிலான ஏலங்கள் பெறப்பட்டன. 2021 ஆம் ஆண்டு 4ஜி அலைக்கற்றை ஏலத்தில், இரண்டாவது நாளில் பெற்ற ஏலத்தின் மதிப்பு ரூ.668.20 கோடியாக இருந்தது.

 3வது நாள்

3வது நாள்

5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர உள்ளதால், 5ஜி அலைக்கற்றை ஏலம் என்பது, 4ஜி அலைக்கற்றை ஏலத்தின் மூலம் பெறப்பட்ட தொகைக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிக்க உள்ளது.

92.06 சதவீதம் அதிகம்

92.06 சதவீதம் அதிகம்

2021 ஆம் ஆண்டின் 4ஜி அலைக்கற்றை ஏலத்தை விட 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.71,639.2 கோடி அதிகமாகப் பெற்றதாக இரண்டு நாள் புள்ளிவிவரங்களின் ஒப்பீடு காட்டுகிறது. சதவீத அடிப்படையில் இது 92.06 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி ஏலத்தில் 3 நிறுவனங்கள்

4ஜி ஏலத்தில் 3 நிறுவனங்கள்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், வோடபோன் ஐடியா லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே மார்ச் 2021 இல் நடந்த 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்றன.

5ஜி ஏலத்தில் 4 நிறுவனங்கள்

5ஜி ஏலத்தில் 4 நிறுவனங்கள்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அவை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், வோடபோன் ஐடியா லிமிடெட் மற்றும் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் லிமிடெட். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஏலத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார் என்பதும், அதைத் தொடர்ந்து சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனமும் மும்முரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 பண வைப்புத்தொகை

பண வைப்புத்தொகை

ஏலம் கேட்கும் 4 நிறுவனங்களால் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பண வைப்பு தொகை ரூ.21,800 கோடியை தாண்டியுள்ளது. இந்த தொகையில் பாதிக்கும் மேல் இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திடம் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் ரூ. 14,000 கோடியை EMD ஆக சேர்த்துள்ளது, அதைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் லிமிடெட் ரூ. 5,500 கோடியும் வோடபோன் ஐடியா லிமிடெட் 5ஜி ஏலத்திற்காக EMD ஆக 2,200 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. அதானி டேட்டா நெட்வொர்க்கின் EMD தொகை 100 கோடி ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Government Receives Bids Worth Rs 1.49 Lakh Crore in 5G Spectrum Auction Day 2!

Government Receives Bids Worth Rs 1.49 Lakh Crore in 5G Spectrum Auction Day 2! | 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்… 2வது நாள் முடிவில் ஏலத்தொகை எத்தனை கோடி?

Story first published: Thursday, July 28, 2022, 6:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.