திரும்பு இடமெல்லாம் Tesla கார் தான்.. போட்டிப்போடு வாங்கும் மக்கள்.. எந்த நாடு தெரியுமா?

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக நார்வே நாட்டில் 75 சதவீதம் எலக்ட்ரிக் கார்கள் தான் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நார்வே நாட்டின் மக்களால் பயன்படுத்தப்படும் எலக்ட்ரி கார்களில் பெரும்பாலான கார்கள் டெஸ்லா நிறுவனத்தின் கார்களாக இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

சுற்றுச்சூழல்

நார்வே நாட்டின் அரசாங்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றில் ஒன்று நார்வே நாட்டில் டீசல் கார்களின் எண்ணிக்கையை குறைத்து எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.

கார்பன் டை ஆக்சைடு

கார்பன் டை ஆக்சைடு

ஒரு டீசல் கார் ஒரு வருடத்துக்கு 4 ஆயிரத்து 600 கிலோ கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்கிறது என்பதால் பெருமளவு மாசு ஏற்படுகிறது என்பதை நார்வே நாடு ஆய்வின் மூலம் கண்டுபிடித்தது. இதனையடுத்தே எலக்ட்ரிக் கார்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை நார்வே நாடு அரசாங்கம் அளித்தது.

சலுகைகள்
 

சலுகைகள்

நார்வே நாட்டில் எலக்ட்ரிக் கார்கள் வாங்கினால் அந்த காருக்கு வரி கட்ட வேண்டிய தேவையில்லை என்றும் இலவசமாக எங்கு வேண்டுமானாலும் பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது. அதேபோல் டோல்கேட்டில் சலுகைகள் உண்டு என்றும் வருமான வரியிலும் எலக்ட்ரிக் கார் வாங்குவதற்கு சலுகைகள் அளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டிராபிக் அதிகமாக இருந்தால் பஸ் போகும் பாதைகளில் எலக்ட்ரிக் கார்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

சார்ஜ்

சார்ஜ்

நார்வே நாட்டின் அரசாங்கம் கூறிய இந்த சலுகையின் காரணமாக டீசல் கார்களில் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நார்வே நாட்டில் டீசல் விலை அதிகம் என்பதும், அதே நேரத்தில் எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு மிகவும் குறைவான கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார உற்பத்தியில் நார்வே தன்னிறைவு பெற்றுள்ளதால் சார்ஜ் செய்வதற்கு மிகவும் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டெஸ்லா

டெஸ்லா

இந்த நிலையில் நார்வே நாட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் கார்களில் 75% டெஸ்லா கார்களையே அந்நாட்டு மக்கள் பயன்படுத்தினர். அதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. நார்வே நாடு மிகவும் குளிர் பிரதேசம் என்பதால் அங்குள்ள கார்களுக்கு ஹீட்டர் அவசியமான தேவையாக இருந்தது.

ஹீட்டர்

ஹீட்டர்

 

மற்ற நிறுவனங்களின் கார்களில் ஹீட்டர் வசதி இல்லை என்ற நிலையில் டெஸ்லா கார்களில் ஹீட்டர் வசதி இருப்பது மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. மேலும் சில நிறுவனங்களின் கார்களில் வீக்கான பேட்டரி காரணமாக பாதி வழியில் நின்று போவது, திடீரென மெதுவாக கார் செல்வது போன்ற பிரச்சனைகள் இருந்தது. ஆனால் இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் டெஸ்லா கார்களில் ஏற்படவில்லை என்பதால் மக்களின் முதல் விருப்பம் டெஸ்லா கார்களாகத்தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why Does Norway Have So Many Tesla Cars? Here are the reasons

Why Does Norway Have So Many Tesla Cars? Here are the reasons | நார்வே நாட்டில் டெஸ்லா கார்கள் மிக அதிகம் பயன்படுத்துவது ஏன்? இதோ காரணங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.