'லெஜண்ட்' ஆசையும் சினிமா ஆர்வலர்களின் கவலையும்- பாவனா த்ரிலிங்- வைரல் 'செஸ்' வீடியோ|விகடன் ஹைலைட்ஸ்

லெஜண்ட் சரவணா ஆசையும் சீரியஸ் சினிமா ஆர்வலர்களின் கவலையும்..! 

லெஜண்ட் சரவணா

“மதுரை திரையரங்க வரலாற்றிலயே புதுமுக நடிகரின் படம் அதிகாலை 4 மணி முதல் ரசிகர் காட்சியாகத் திரையிடப்படுவது இதுவே முதல் முறை.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என முன்னணி நாயக நடிகர்களுக்கு இணையாக வெளியான ‘பான் இந்தியா’ மூவி. உலகம் முழுவது 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது… ” என ஏகப்பட்ட அலப்பறைகளுடன் நேற்று வெளியானது சரவணா ஸ்டோர் புகழ் லெஜண்ட் சரவணா அருள் ஹீரோவாக நடித்த ‘தி லெஜண்ட் சரவணன்’ திரைப்படம்.

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதலிருந்தே சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலான விமர்சனங்கள் றெக்கை கட்டின. அதற்கு முன்னதாகவே சுற்றிச் சுழன்றாடும் அழகிய பெண்களுக்கு மத்தியில் ஜிகு ஜிகு ஆடையுடன் சரவணா அருள் ஆடும் அவரது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களும் ஒரு பக்கம் கேலி, கிண்டல்களுக்கு உள்ளான போதிலும், இன்னொரு தரப்பினர், ” அவர் உழைப்பு… அவர் பணம்… அவரது கடை விளம்பரத்தில் நடித்தால் என்ன தப்பு..?” , “அவரது தன்னம்பிக்கையை பாராட்டலாமே..!” என்ற ரீதியில் அதற்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தினர்.

அந்த தன்னம்பிக்கை ஓவர் டோஸாகிவிட்டதோ அல்லது அருகில் உள்ளவர்கள், ” அண்ணே உங்க ரேஞ்சுக்கு நீங்க…” என்ற ரீதியில் உசுப்பேற்றினார்களோ தெரியவில்லை, ‘விளம்பரத்தைப் போன்று சினிமாவில் நடித்தால் என்ன..?’ என்ற ஆசை வந்துவிட்டது அண்ணாச்சிக்கு.

அப்புறமென்ன…? முன்னணி ஹீரோ ப்ளஸ் டாப் டைரக்டர்களின் படங்களுக்கு என்னென்னெ டெக்னீசியன்கள் பணிபுரிவார்களோ அவர்கள் அத்தனை பேரும் அண்ணாச்சி படத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். கூடவே பிரபு, நாசர் தொடங்கி, காணாமல் போன மன்சூர் அலிகான் வரை ஏகப்பட்ட கேரக்டர்கள் ஆர்ட்டிஸ்ட்களும், காமெடிக்கு பஞ்சம் வந்துவிடக்கூடாது என விவேக், யோகி பாபு, ஸ்க்ரீனை கலர்ஃபுல்லாக்க ஏகப்பட்ட நடிகைகள் என அமளிதுமளியாகத் தொடங்கியது ஷூட்டிங்.

இதில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தும் மசியாததால், புதுமுகங்களை நடிக்க வைத்தார்கள். கூடவே கோடிகளைக் கொட்டி, பிரமாண்ட இயக்குநர்களே அசந்து போகும் வகையிலான பிரமாண்ட பின்னணியில் படமாக்கப்பட்டன காட்சிகள்.

இவ்வளவு மெனக்கிடல்களுக்கு மத்தியில் நேற்று வெளியானது படம். எதிர்பார்த்தது போன்றே நெகட்டிவான விமர்சனங்களோடு, “அண்ணாச்சிக்கு ஏன் இந்த ஆசை..? பேசாமா தொழிலில் கவனம் செலுத்தாலம்ல…” என்ற அட்வைஸ்கள் வேறு.

ஆனால், இப்படியெல்லாம் விமர்சனங்கள் வரும் என எதிர்பார்த்தே, கிண்டல், கேலி செய்யும் நெட்டிசன்களுக்கு, ” உனக்கு ஏம்பா எரியுது..?” என்ற ரீதியில் பதிலடி கொடுத்தும் அண்ணாச்சி ரசிகர்கள்(?!) அவர்களைத் தெறிக்க விட்டனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சீரியஸ் சினிமா ஆர்வலர்கள் ” கலைத்துறைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஹீரோவாக நடிக்கலாம் என்றாலும், தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம் என்றாலும், அதற்கான முயற்சியும் உழைப்பும் தேவை அல்லவா..?. பணபலத்தை மட்டுமே நம்பி இப்படியான படங்களை எடுக்கலாமா..? தமிழ் திரையுலகம் தற்போது வித்தியாசமான, புதுப்புது முயற்சிகளில் ரசிக்கும் வைக்கும் வகையிலான படங்களைக் கொடுத்து, பிற மாநில கலைஞர்களையே பொறாமைப்பட வைத்துக்கொண்டிருக்கிறது. இப்பதான் ஏகப்பட்ட தேசிய விருதுகளையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்துள்ளது. பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்களெல்லாம் தமிழின் முக்கிய படங்களைத் தவறாமல் பார்த்து விடுவதாக சொல்கிறார்கள்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் ஒரு ஆரோக்கியமான தமிழ்த் திரைப்படச் சூழலை, ‘தி லெஜண்ட் சரவணன்’ போன்ற படங்கள் தடம் மாற்றிவிடதா..? ஏதோ தமிழில் மட்டும் வெளியாகி இருந்தால் கூட, அது குறித்த பேச்சு தமிழ்நாட்டோடு முடிந்து போய் இருக்கும். ஆனால் அண்ணாச்சி 2,500 திரையரங்குகளில் திரையிட்டு தமிழ் சினிமாவின் ரசனையை கேலிக்கூத்தாக்கி விட்டாரே..!” என்கிறார்கள் அங்கலாய்ப்புடன்.

அங்கலாய்ப்பை அதிர்ச்சியாக்கும் வகையில், அருள் அண்ணாச்சி அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்..?

ஆனாலும் சினிமா ஆர்வலர்கள் மன அமைதி கொள்ளும் ரசனையான, சீரியஸ் படங்களும் ரிலீஸுக்கு வரிசைக்கட்டிக்கொண்டுதான் உள்ளன. அப்படியான ஒரு படமாக தனது ‘பொம்மை நாயகி’ இருக்கும் என நம்பிக்கையுடன் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ஷான். “இப்படியொரு யோகிபாபுவை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்!” என அவர், தனது படம் குறித்த பகிர்ந்ததைப் படிக்க க்ளிக் செய்க..

செஸ் ஒலிம்பியாட் விழா: த்ரிலிங் அனுபவம் பகிரும் தொகுப்பாளர் பாவனா!

பாவனா

நேற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கியது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை பாவனா தொகுத்து வழங்கியிருந்தார். அந்த அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.

“இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கப் போகிறேன் என்கிற தகவலே எனக்கு 48 மணி நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும்…” என பாவனா பகிரும் த்ரிலிங் அனுபவம் படிக்க க்ளிக் செய்க…

Chess Olympiad: ‘காயின்களுக்குப் பதில் கலைஞர்கள்’ – வீடியோ குறித்து பகிரும் கலெக்டர் கவிதா ராமு

சதுரங்க நடன காணொளி

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சதுரங்க காயின்களுக்குப் பதிலாக, நடனக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சதுரங்க நடன காணொளிக்கு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.

பரத நாட்டியத்தின்மீது ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமு, 2020-ம் ஆண்டு சீன அதிபர் ஜின் பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது, பிரமாண்ட பரத நாட்டியத்தை ஏற்பாடு செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அந்த வகையில்தான் அவரின் எண்ணத்தால், தோன்றிய இந்த சதுரங்க நடன வீடியோ பலரின் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோ குறித்து கலெக்டர் கவிதா ராமுவின் பகிர்ந்ததைப் படிக்க க்ளிக் செய்க…

‘விவாகரத்து செய்த கணவரை விருந்தினரைப் போல் நடத்த வேண்டும்!’ – தீர்ப்பும் விவாதங்களும்…

விவாகரத்து

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விவாகரத்து வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்தபோது, “குழந்தையைப் பார்க்க வரும் கணவரை, விருந்தினரைப்போல் மரியாதையுடன் நடத்த வேண்டும். விருந்தினர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்பதே நமது அறம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. விவாகரத்துக்குப் பின்னரும் கணவருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இத்தீர்ப்பை எப்படிப் பார்க்கலாம் என, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி சொல்வதைப் படிக்க க்ளிக் செய்க…

39 முறை நிராகரிப்பு; மனம் தளராமல் Google-ல் வேலை வாங்கிய இளைஞர்!

Google

ம் கனவுகளையும் இலக்குகளையும் அடையத் தோல்வியிலும் மனம் தளராமல் விடாமல் முயற்சிக்கும் குணமும் தன்னம்பிக்கையும் வேண்டும். அப்படி தனது கனவு நிறுவனத்தில் பணிபுரிய விடாமல் முயன்று நினைத்ததைச் சாதித்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டைலர் கோஹன்.

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றுவதற்காக பல முறை தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்குத் தனது resume-யை அனுப்பி விண்ணப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.

2019-ல் விண்ணப்பிக்க ஆரம்பித்த இவர் நான்கு வருடங்களாக 39 முறை ரிஜெக்ட் செய்யப்பட்டும் மனம் தளராமல் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்து சாதித்த அவரது சாதனை கதையைப் படிக்க க்ளிக் செய்க…

” பெரியவர்களின் லைசென்ஸோடு காதலித்த நாள்கள் அவை!” – பட்டுக்கோட்டை பிரபாகர்

Kadhal Padikkattugal – Pattukottai Prabhakar

காதலில் ஒரு பக்குவம் தேவை. தீவிரம் தேவை!’ – காதல் பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர். 12.06.1996 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து…

(ஒரு முன் குறிப்பு: காதலைப் பற்றி நியாயமாக ஒரு புத்தகமே எழுதலாம். ஒரு கட்டுரைக்குள் ஆயிரத்தில் ஒரு பங்காக என் கருத்துகளைச் சுருக்கி வரைந்திருக்கிறேன்.)

வார இதழ் தொடர்கதைகளிலும் ஸெல்லுலாய்ட் சித்திரங்களிலும் மட்டுமே அதிகப் புழக்கத்தில் இருந்த இந்தக் காதல் இப்போது வைரஸ் வேகத்தில் பரவிவிட்டது.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு! விகடனுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் அளித்த சுவாரஸ்யமான பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.