மூன்றாக உடையும் டெஸ்லா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அதன் தலைவர் எலான் மஸ்க்-ன் பல முக்கியமான முடிவுகளால் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் டெஸ்லா பங்குகள் மீண்டும் உயர் துவங்கியுள்ளது. இந்த முக்கியமான காலகட்டத்தில் டெஸ்லா மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இப்படியும் ஒரு பணக்காரர் பட்டியல்… 8ஆம் இடம் பிடித்த எலான் மஸ்க்!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் முக்கியமான நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்ததுள்ள நிலையில், இக்கூட்டத்தில் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கை 3 ஆக உடைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்டாக் ஸ்லிப்ட் வாயிலாகச் சிறு மற்றும் புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சந்தை நிலையற்ற தன்மையில் வைக்க முடியும்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்தக் காலாண்டு கூட்டம் டெஸ்லா நிறுவனம் புதிதாகக் கட்டமைத்துள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஆஸ்டின் நகரத் தொழிற்சாலையில் நடந்தது. எலான் மஸ்க் சிலிக்கான் வேலியில் இருந்து அலுவலகத்தை டெக்சாஸ்-க்கு மாற்றியுள்ள நிலையில் எலான் மஸ்க் அங்கேயே தங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

20 மில்லியன் வாகனங்கள்
 

20 மில்லியன் வாகனங்கள்

இப்போது ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிலையில் ஆண்டுக்கு 20 மில்லியன் வாகனங்களை உருவாக்கும் இலக்கை நோக்கி நிறுவனம் நகரும் நிலையில், எதிர்காலத்தில் ஒரு பெரிய தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும் கூட்டத்தில் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் எலான் மஸ்க் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்தார்.

டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள்

நேற்றைய வர்த்தக முடிவில் டெஸ்லா பங்குகள் சுமார் 0.40 சதவீதம் அதிகரித்து 925.90 டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் 2022 ஆண்டில் டெல்லா பங்குகள் 22.83 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்நிலையில் ஒரு பங்கு 3 ஆக உடையும் பட்சத்தில் ஒரு பங்கு விலை 308 ஆகக் குறைந்து, ஒரு டெஸ்லா பங்குகளுக்குப் பதிலாக 3 டெஸ்லா பங்குகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tesla investors approve 3:1 stock split

Tesla investors approve 3:1 stock split மூன்றாக உடையும் டெல்ஸா பங்குகள்.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.