கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் அதன் நகல்களை கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 2,348, சி.பி.எஸ்.இ., பள்ளியில் 400 மாணவ, மாணவியர் என மொத்தம் 2,748 பேர் படிக்கின்றனர்.

இங்கு விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் திகதி அதிகாலை தரைத்தளத்தில் இறந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து 17ம் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இதில், வாகனங்கள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.எரிந்த சான்றிதழுக்கு மாற்று சான்றிதழ் வழங்க கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராஜூ மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Kallakurichi Case School Students Certificate

மேலும், கலெக்டர் அலுவலகத்தில் சான்றிதழ் நகலைப் பெற துவங்கப்பட்டுள்ள முகாமில், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சான்றிதழ் நகல்களை வழங்கி வருகின்றனர்.

மெட்ரிக் பள்ளியில் பயிலும் 1,700, சி.பி.எஸ்.இ., பயிலும் 300 மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்கள் மற்றும் விபரங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அனைத்து மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல், தகவல் பெறப்பட்டதும் கலெக்டர் மூலம் சம்மந்தப்பட்ட துறைக்கு தேவைப்படும் சான்றிதழ்களின் விபரங்கள் அனுப்பி, உடனடியாக புதிய சான்றிதழ் பெறப்பட்டு பெற்றோர்களிடம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.