இந்தியாவை விட்டு வெளியேறிய ஃபோர்டுடன் ஒப்பந்தம் செய்துள்ள டாடா.. எதற்காக தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம், ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்துடன் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 725.70 கோடி ரூபாய் (91.5 மில்லியன் டாலர்) ஆகும்.

அதெல்லாம் சரி, எதற்காக இந்த ஒப்பந்தம்? என்ன காரணம்? இதனால் யாருக்கு என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்.

உங்க அலும்புக்கு ஒரு அளவு இல்லையா.. ஒரு Garbage Bag விலை 1.4 லட்சமா..?

ஆலையை வாங்க ஒப்பந்தம்

ஆலையை வாங்க ஒப்பந்தம்

இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் வெளியேறிய, ஃபோர்டு நிறுவனத்தின், குஜராத் ஃபோர்டு ஆலையை வாங்க டாடா மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தமானது இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபைலிட்டி லிமிடெட் (TPEML) மற்றும் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் (FIPL) ஆகியவற்றுக்கும் இடையேயான ஒப்பந்தமாகும்.

டாடா மோட்டார்ஸ் கருத்து

டாடா மோட்டார்ஸ் கருத்து

இந்த ஒப்பந்தம் நிலம்,போர்டு நிறுவனத்தின் இந்த ஆலைக்கு சொந்தமான சொத்துக்கள், அதன் ஊழியர்கள் அனைத்தையும் உள்ளடக்கியது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த கையகப்படுத்தலானது மேற்கோண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கும். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியினை மேம்படுத்தும்.

உற்பத்தி அதிகரிக்கும்
 

உற்பத்தி அதிகரிக்கும்

டாடாவின் இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு, டாடாவின் உற்பத்தி திறன் ஆனது 3 லட்சம் யூனிட்கள் என்ற அளவில் இருந்து, 4 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.

20 வருடங்களுக்கு மேலாக இந்திய சந்தையில் தனது வணிகத்தினை நிலை நாட்ட போராடி வந்த போர்டு நிறுவனம், தனது விற்பனையானது 2% கீழாக இருந்த நிலையில், அதன் உற்பத்தி மற்றும் விற்பனையினை இந்தியாவில் நிறுத்தி இங்கிருந்து வெளியேறியது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

இந்த ஒப்பந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது என் எஸ் இ-யில் சற்று அதிகரித்து, 465.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் 471.60 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 464.45 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 536.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 268.45 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 466.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் 471.50 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 464.45 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 536.50 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 268.50 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata motors to buy ford India’s sanand plant for around Rs.725.70 crore

Tata motors plans to acquires ford india’s sanand plant for Rs.725.70 crore/இந்தியாவை விட்டு வெளியேறிய ஃபோர்டுடன் ஒப்பந்தம் செய்துள்ள டாடா.. எதற்காக தெரியுமா?

Story first published: Monday, August 8, 2022, 12:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.