வெள்ளிக்கு இவ்வளவு டிமாண்ட் இருக்கா.. 2022ல் வரலாற்று உச்சத்தை தொடலாம்..!

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்தாலும், குறைந்தாலும் இதை வாங்குவோர் எண்ணிக்கை எப்போது குறைவது இல்லை, அந்த வகையில் வெள்ளி விலை 2 வருட சரிவை எட்டிய நிலையில் 2022 ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளி இறக்குமதி கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகரிக்க உள்ளது.

இதேவேளையில் பங்குச்சந்தையிலும், நாணய சந்தையிலும் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்கத் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் துவங்கினர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி இறக்குமதி அளவு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது புல்லியன் சந்தை வல்லுனர்களுக்கே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2022ஆம் ஆண்டில் குறைந்த வேளையில் இந்தியாவில் வெள்ளி-க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக 2022ஆம் ஆண்டில் வெள்ளி இறக்குமதி 8,200 டன் ஆக உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

5,100 டன்

5,100 டன்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவில் வெள்ளி இறக்குமதி கடந்த ஆண்டில் வெறும் 110 டன் ஆக இருந்த நிலையில் 5,100 டன்களாக உயர்ந்துள்ளது.

இறக்குமதி

இறக்குமதி

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வலுவான இறக்குமதிக்குப் பிறகு வெள்ளிப் பங்குகளை விற்றுள்ளனர்.

8,200 டன் ஆக உயர வாய்ப்பு
 

8,200 டன் ஆக உயர வாய்ப்பு

2020 ஆம் ஆண்டில் வெள்ளி இறக்குமதி 2,218 டன் ஆக இருந்தது, 2021 ஆம் ஆண்டில் 2,773 டன் ஆக இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் 5,969 டன்னாக இருந்தது. இந்நிலையில் 2022ல் வெள்ளி இறக்குமதி 8,200 டன் ஆக உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

2020 ஆம் ஆண்டில் வெள்ளி விலை ஒரு கிலோ 77,949 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையை எட்டியது. இன்று இந்தியாவில் வெள்ளி ஒரு கிலோ விலை 1.12 சதவீதம் சரிந்து 57,020 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s silver import may clock record high in 2022

India’s silver import may clock record high in 2022 வெள்ளிக்கு இவ்வளவு டிமாண்டா.. 2022ல் வரலாற்று உச்சத்தைத் தொடலாம்..!

Story first published: Wednesday, August 17, 2022, 20:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.