வயநாடு ராகுல்காந்தி அலுவலகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 4 காங்கிரசார் கைது! கேரள அரசு நடவடிக்கை…

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி.யின் அலுவலகம் வயநாட்டில் உள்ளது. இந்த அலுவலகம் மீது, கம்யுனிஸ்டு கட்சி யினர் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது ராகுல் அலுவலகத்தை தாக்கியதாக  4 காங்கிரசாரை கேரள மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் எம்பி அலுவலகம் மீது மாநிலத்தை ஆளும் பினராயி தலைமையிலான மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் மாதம் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தியின் வயநாடு எம்.பி. அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் எஸ்.எப்.ஐ. தொண்டர்கள் அலுவலகத்தை சூறையாடியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போலீசார் ராகுல்காந்தியின் அலுவலகத்தில் இருந்த காந்தி படத்தை அலுவலக ஊழியர்களே சேதப்படுத்தியதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த ராகுல் காந்தியின் எம்.பி. அலுவலக ஊழியர்கள் உள்பட 4 காங்கிரசாருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியும் காங்கிரசார் 4 பேரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஜிப், நவ்ஷாத், ரதிஷ் மற்றும் ராகுல் காந்தியின் எம்.பி. அலுவலக ஊழியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் ராகுல்காந்தி அலுவலகம் மீது ஆளும்கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ தாக்குதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.