எல்லாரும் ரைட்-ன்னா சீனா மட்டும் லெப்ட்.. ஏன் இப்படி..? இந்தியாவுக்கு பாதிப்பா..?

உலக நாடுகளில் பணவீக்க அதிகரிப்பால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது.

இந்த நிலையில் சீனா கொரோனா, புதிய வைரஸ், மழை வெள்ளம், மின்சாரத் தட்டுப்பாடு, தைவான் பிரச்சனை, ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி போன்ற பலவற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கும் வேளையில், சரிவில் இருக்கும் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வர வட்டியை குறைத்து வருகிறது.

இதனால் இந்தியாவுக்கு என்னவெல்லாம் பாதிப்பு உண்டாகும்..?

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளரா நீங்க.. இனி உங்க EMI அதிகரிக்கலாம்..!

சீனா

சீனா

சீனாவின் மத்திய வங்கியான People’s Bank of China தனது நாணய கொள்கை முடிவில் தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் ஏற்கனவே 2 முறை வட்டியை குறைத்துள்ள நிலையில் இது 3வது முறையாக வட்டியை குறைத்துள்ளது.

கடனுக்கான் ப்ரைம் ரேட் விகிதம்

கடனுக்கான் ப்ரைம் ரேட் விகிதம்

இன்றைய அறிவிப்பில் சீனா தனது 5 ஆண்டுக் கடனுக்கான ப்ரைம் ரேட் விகிதத்தை 4.45 சதவீதத்தில் இருந்து 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல் ஒரு வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 3.7 சதவீதத்தில் இருந்த 3.65 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

பொருளாதாரம்
 

பொருளாதாரம்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தற்போது சீனாவில் அளிக்கப்பட்டு வரும் பெரும்பாலான ரீடைல் பிரிவு கடன்கள் அனைத்தும் ஒரு வருட கடனுக்கான வட்டியில் தான் அளிக்கப்படுகிறது. ஆயினும் பொருளாதார வளர்ச்சியில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை என்பதால் 2022ல் 3வது முறையாக வட்டியை குறைத்துள்ளது சீனா.

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் துறை

சீனா ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள அதிகப்படியான கடன் சுமை அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இதேபோல் சீன முதலீட்டு சந்தையும் மந்தமான நிலையில் இருக்கும் போது இந்த 3வது வட்டி குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பா, பிரிட்டன்

ஐரோப்பா, பிரிட்டன்

ஏற்கனவே ஐரோப்பா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகப் பொருளாதார மந்த நிலைக்குள் செல்லும் நிலையில் உள்ளது. இதேபோல் சீனா, பிரிட்டன் ஆகியவையும் இந்த வரிசையில் நிற்கிறது. எப்படியாவது பொருளாதாரத்தை மீட்க வேண்டும் எனப் போராடும் சீனாவுக்குத் தைவான் பிரச்சனையும், ரியல் எஸ்டேட் கடனும் கடிவாளம் போன்றது.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு

ஐரோப்பா, சீனா, பிரிட்டன் போன்ற முன்னணி நாடுகளின் பொருளாதாரம் தடுமாறி வரும் நிலையில் இந்தியாவுக்கு நேரடியாகப் பாதிப்பு இல்லாவிட்டாலும் சர்வதேச முதலீட்டாளர்களின் முடிவு காரணமாகவும், சீனாவின் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வின் காரணமாகவும் கடுமையாகப் பாதிப்பை எதிர்கொள்ளும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china சீனா

English summary

China’s series of rate cuts, how it impacts India? What Indian investors must know

China’s series of rate cuts, how it impacts India? What Indian investors must know | எல்லாரும் ரைட்-ன்னா சீனா மட்டும் லெப்ட்.. ஏன் இப்படி..? இந்தியாவுக்குப் பாதிப்பா..?

Story first published: Monday, August 22, 2022, 20:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.