ஏலகிரி மலையில் சாலையை மறைக்கும் செடிகளால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஏலகிரி : ஏலகிரி மலையில் நிலாவூர் செல்லும் சாலையோரங்களில்  வளைவு பகுதியில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏலகிரி மலையில் சுமார் 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி  ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.14 கிராமத்திற்கும்  சாலை வசதிகள் உள்ளன.

மேலும் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக இருப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மங்களம் கூட்ரோடு முதல் நிலாவூர் வரையில் உள்ள சாலைகளின் ஓரங்களில் தேவையற்ற செடிகள், மரக்கிளைகள் வளர்ந்துள்ளன. இதனால் வளைவு பகுதிகளில் முன்னர் வரும் வாகனங்கள் வருவது தெரியாமல் சாலையோரங்களில் மரக்கிளைகள்,செடிகள்,  மறைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் நிலாவூர் பகுதியில் ஃபண்டோரா பார்க், சூசைட் பாயிண்ட், கதவநாச்சி அம்மன் திருக்கோயில், போன்ற சுற்றுலா தளங்கள் இருப்பதால் இப்பகுதிக்கு அதிக சுற்றுலாப் பயணிகளும் நிலாவூர் பொதுமக்களும் இச்சாலை வழியாக செல்கின்றனர். இச்சாலையில் அவ்வப்போது வளைவு பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே சுற்றுலா பயணிகளும் அப்பகுதி ஊர் மக்களும் சாலையில் ஓரங்களில் உள்ள தேவையற்ற செடிகளையும், மரக்கிளைகளையும் அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு,  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். எனவே உடனடியாக இதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் சாலையில் உள்ள சிறு செடிகளையும், மரக்கிளைகளையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.