ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ,ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம்  உயிரோட்ட முடியுமா, என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல்,ராகுல் காந்தி நடந்தாலும் சரி ,ஓடிபோனாலும் சரி ,மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக, கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி ஆடைகளை அணிந்து மேடையில் கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்திரி ரகுராம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது:

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ,ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம்  உயிரூட்ட முடியுமா, என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு – மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பாஜகவிற்க்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். கட்சியைக் மீட்க, ராகுல் காந்தி இந்த பலபரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல் எனவும் ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடிபோனாலும் சரி, மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது. காலம் கெட்டபிறகு சூர்யநமஸ்காரம் செய்வது போல, ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் அவரது உடல் நலத்திற்க்கு நல்லதாக இருக்கலாம். நாட்டிற்க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயணில்லை.

மேலும், திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும், பொது மேடையிலே அவர்களின் தலைவர்களை வைத்து கொண்டு அநாகரிகமாக பேசும் கலச்சாரத்தை கொண்டு வந்ததே அவர்கள் தான் எனவும்

மாடல் மாடல் என்று சொல்கிறார்கள். அது தான் இந்த புதுமாடல்.. என கோவை மாநகராட்சியின் 70 வார்டில் இருவர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டபட்டுள்ள கழிப்பறை குறித்து விமர்சனம் செய்த வானதி சீனிவாசன், கழிப்பறை கட்டுவதில் கூட திராவிட மாடல் என்று மக்கள் பேசட்டும். எனவும் இந்த கழிப்பறை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்கதான் போகிறோம் என்றும் இதையெல்லாம் பார்க்கும் போது இந்த அரசாங்கம், மக்களை பற்றி கவலைபடாமல் தங்களது காண்ராக்டர்களை பற்றி கவலை படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிவதாக அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.