புதுடில்லி:உலகின் பிரபல ‘ஆஸ்கர்’விருதுக்கு குஜராத்தி மொழியில் வெளியான செல்லோ ஷோ என்ற திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ‘ஆஸ்கர் விருது’ உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான போட்டியில் பங்கேற்க, எல்லா நாடுகளிலும் இருந்தும் சிறந்த திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்படும்,இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு, குஜராத்தி மொழியில், பான் நளின் இயக்கத்தில் தயாரான செல்லோ ஷோ என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் லாஸ்ட் பிலிம் ஷோ என்ற தலைப்பில், மத்தியஅரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் அக்., 14ல் நாடு முழுதும் தியேட்டர்களில் வெளியாகிறது.இந்தப் படம் ஏற்கனவே, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நடந்த 66வது உலகத் திரைப்பட விழாவில் பல பிரிவுகளில் விருதுகள் வாங்கியுள்ளது.இயக்குனர் அசுதோஸ் கவுரிக்கர் இயக்கத்தில், அமீர்கான் நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான லகான் திரைப்படம் தான் கடைசியாக இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு, ‘ஆஸ்கர் நாமினேஷன்’ பட்டியல் வரை சென்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement