சிறப்பாக செயல்படும் இ சேவை மையங்கள்: அமைச்சர் பெருமிதம்!

தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் (19.09.2022) நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-ஆபிஸ் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “இ-ஆபிஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தலைமைச் செயலகத்தில் 3425 பணியாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியை குறைக்க இந்த ஆண்டுக்குள் 300-க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த சேவைகள் இ- சேவை மையங்களுடன் இணைக்கப்பட உள்ளது.

இ ஆபிஸ் திட்டம் மூலம் அரசின் வருவாய் மிச்சப்படுத்தப்படுகிறது . காகிதம் இல்லா இ-ஆபீஸ் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் திருப்பூரில் மட்டும் 31 டன் காகிதத்திற்கான செலவு சேமிக்கப்படுகிறது. அரசு இ-சேவை மையங்களில் ஏற்படும் தாமதம் குறைக்கப்பட்டு வருகிறது , அரசின் இ- சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்படுவதன் மூலம் எந்த அலுவலகத்தில் தாமதம் ஏற்படுகிறது என்பதை கண்டறியும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாமதம் இல்லாமல் அனைவருக்கும் சேவை கிடைக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் தற்போது உள்ள இ சேவை மையங்கள் போல முறைப்படுத்தப்படவில்லை. கிராமப்புறங்களில் போதுமான மென்பொருள்கள் பதிவேற்றப்படவில்லை. பதவியேற்று ஒரு வருட காலத்தில் கூடுதலான மென்பொருட்களும் பதிவேற்றப்பட்டு இ சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகளில் உள்ள மென்பொருட்கள் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் முறையாக செயல்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.