இந்திய பொருளாதாரம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா..!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் எப்போதும் பிசியாக இருப்பவர். தனக்கு பிடித்தமான, மக்களை யோசிக்க வைக்கும் விதமாகவும், திறமையானவற்றை கண்டுபிடித்து அவற்றிற்கு அங்கீகாரம் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளவர்.

இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்து வரும் சூழலில், இது உலகிலேயே முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ச்சி காணும் என தெரிவித்துள்ளார்.

தற்போது சர்வதேச அளவில் 5வது இடத்தில் இருந்து வரும் இந்திய பொருளாதாரம், மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமுமாக இருந்து வருகின்றது.

மஹிந்திரா நிதி நிறுவனத்துக்கு கண்டிசன் போட்ட ஆர்பிஐ.. என்ன தெரியுமா?

இங்கிலாந்தினை விஞ்சிய இந்தியா

இங்கிலாந்தினை விஞ்சிய இந்தியா

ஐஎஃப்சி குழுமத்தின் வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இங்கிலாந்தினை விஞ்சி இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இது மூன்றாவது பொருளாதார நாடாக மாறும்போது, அதன் கவனம் எப்படியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அந்த நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை என கூறியுள்ளார்.

ஏன்?

ஏன்?

2021ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தியா ஐந்தாவது பெரிய நாடாக உருவெடுத்தது. இங்கிலாந்து பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியா இங்கிலாந்தினை ஆறாவது இடத்திற்கு தள்ளி முன்னேறியுள்ளது. இது இரண்டாவது முறையாகும். முதல் முறையாக கடந்த 2019ல் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி
 

பொருளாதார வளர்ச்சி

நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7% மேலாக வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலாண்டில் இந்திய பங்குகளின் மதிப்பானது ஏற்றம் கண்டுள்ளது. MSCI வளர்ந்து வரும் சந்தைகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தின் நிலை

இங்கிலாந்தின் நிலை

அதுமட்டும் இங்கிலாந்தில் பணவீக்கம் மட்டும் அல்லாது, அங்கு பொருளாதாரமும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் ஜிடிபி விகிதம், இரண்டாவது காலாண்டில் 1% மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுண்டின் மதிப்பும் நடப்பு ஆண்டில் ரூபாய்க்கு எதிராக 8% வீழ்ச்சி கண்டுள்ளது.

ஜெர்மனியை விஞ்சலாம்

ஜெர்மனியை விஞ்சலாம்

சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தற்போதைய வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 2027ல் இந்தியா ஜெர்மனியை விஞ்ச வேண்டும். 2029ல் ஜப்பானையும் விஞ்ச வேண்டும். எனினும் நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதமானது 6.7 – 7.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. நாங்கள் மிக நம்பிக்கையாக உள்ளோம். சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் , உலகில் 6 – 6.5% வளர்ச்சி இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Anand Mahindra predicts that India will grow to become the 3rd largest economy in the world

Anand Mahindra predicts that India will grow to become the 3rd largest economy in the world

Story first published: Friday, September 23, 2022, 19:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.