ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் 1000 மடங்கு அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன் : ‘உலகம் முழுதும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது’ என, அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வடக்கு அமெரிக்க ஹிந்துக்கள் கூட்டமைப்பு சார்பில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் வாஷிங்டனில் நடந்தது.

இதில் பங்கேற்ற ‘நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஜோயல் பின்கெல்ஸ்டீன் பேசியதாவது:உலகம் முழுதும் மத மோதல்கள் உள்ளிட்டவை தொடர்பாக எங்களுடைய அமைப்பு ஆய்வு செய்தது.இதில், ‘ஹிந்துபோபியா’ எனப்படும் ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலை தற்போது உலகெங்கும் பரவியுள்ளது தெரியவந்து உள்ளது.

latest tamil news

சமீப காலமாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகளில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது. இது, சமூக வலைதளங்களிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இது, கடந்த சில மாதங்களில் மட்டும், 1,000 மடங்கு அதிகரித்து உள்ளது.

எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் மட்டும், 2020ல் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள், 500 மடங்கு அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.