"நான் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவன்; நமஸ்தே என்பதன் சக்தியை அன்றுதான்…" – அமீர் கான்

பிரபல பாலிவுட் நடிகராக தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருபவர் அமீர்கான். இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க திரைக்கலைஞனாக இருப்பவர்.

நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களை உருவாக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. அதேபோல இவர் நடித்த ‘தங்கல்’ படம் இந்தியா முழுவதும் பிரபலமாகிப் பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இன்றும் பலரின் ஃபேவரைட் படமாக இருக்கும் திரைப்படம். தன் பெண் பிள்ளைகளை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கப் போராடும் தந்தையின் மிகப்பெரிய கனவைப் பற்றிப் பேசிய திரைப்படம்.

தங்கல் | அமீர் கான்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அமீர் கான், இப்படத்தை பஞ்சாப்பின் கிராமங்களில் படப்பிடிப்பு செய்த அனுபவம் பற்றியும், அங்கிருக்கும் மக்கள் தனக்கு ‘நமஸ்தே’ கூறியது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “ ‘தங்கல்’ படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப்பின் கிராமங்களில்தான் நடந்தது. அந்த சமயங்களில் தினமும் காலை 4 -5 மணியளவில் நான் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்வேன்.

அந்த அதிகாலை வேலைகளிலும் மக்கள் என்னைப் பார்க்க படப்பிடிப்புத் தளத்தில் காத்திருப்பார்கள். அதேபோல இரவு படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து செல்லும்போதும் எல்லோரும் தங்களின் வீட்டில் வெளியில் நின்று என்னைப் பார்த்து ‘குட் நைட்’ என்று சொல்லுவார்கள். இது படப்பிடிப்பு நடந்த எல்லா நாள்களிலும் நடந்தது. அவர்கள் படப்பிடிப்பிற்குக் கொஞ்சம்கூட இடையூறாக இருக்கவில்லை. 

அமீர் கான்

அவர்களிடம் நான் கண்டு நெகிழ்ந்தது, அவர்கள் யாரைப் பார்த்தாலும் முதலில் ‘நமஸ்தே’ சொல்வார்கள். அதில் எந்தப் பாகுபாடும் காட்ட மாட்டார்கள். என்னிடம் நிறைய முறை சொல்லியிருக்கிறார்கள். நான் இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் இஸ்லாமிய முறைப்படி அவர்களுக்குத் தலை குனிந்து மரியாதை கொடுப்பேன். பிறகுதான் ‘நமஸ்தே’ என்பதன் சக்தியை உணர்ந்தேன். அது எல்லோரையும் மதிக்கும் நல்ல பண்பாடு. எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் ‘நமஸ்தே’ சொல்வது நல்ல குணம். இதுபோல் பஞ்சாபி மக்களிடம் நிறைய அன்பான விஷயங்கள் இருப்பதைப் பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. அது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது” என்று

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.