இன்று நாடு முழுவதும் 2.20 மணி நேர மின் துண்டிப்பு

இன்று (26) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 – பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
 – பி.ப. 6.00 – பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின் துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.