சென்னையில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி.. அதிரடி அறிவிப்பு!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியது என்பதும் இந்த ஐபோன்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன் சீரிஸ் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக ஐபோன் 14 இனி சென்னையிலும் உற்பத்தி செய்து இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 1 முதல் வரவிருக்கும் வரவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள்.. யாருக்கு என்ன பலன்?

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐபோன் 14 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்., இந்தியாவில் தமிழகத்தில் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையை ஆப்பிள் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி

ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி

இன்னும் சில நாட்களில் ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஐபோன் ஆலை

இந்தியாவில் ஐபோன் ஆலை

2017 ஆம் ஆண்டு ஐபோன் SE 2 மாடலை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க தொடங்கியது. அதன்பின்னர் ​​iPhone SE, iPhone 12, iPhone 13, iPhone 14 ஆகியவற்றையும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படும் இந்த ஐபோன்கள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பபடும் என்றும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 14

ஆப்பிள் ஐபோன் 14

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max ஆகிய நான்கு மாடல்கள் ஐபோன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

20 ஆண்டுகால வரலாறு

20 ஆண்டுகால வரலாறு

இந்தியாவுக்கும் ஆப்பிள் ஐபோனுக்கும் 20 ஆண்டு கால வரலாறு உள்ளது என்றும் ஆப்பிள் தனது ஆன்லைன் ஸ்டோரை கடந்த 2020ம் ஆண்டில் தொடங்கியதில் இருந்து இந்திய வாடிக்கையாளர்களை அதிகம் பெற்றுள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஐபோன் சந்தை

இந்தியாவில் ஐபோன் சந்தை

ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மற்றும் விற்பனையை விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் செயலி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி மையத்தை பெங்களூரில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் சந்தை விரிவடைந்து கொண்டே வரும் நிலையில் இந்தியா, ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு சிறந்த சந்தையாக உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apple starts production of iPhone 14 at Foxconn’s plant near Chennai

Apple starts production of iPhone 14 at Foxconn’s plant near Chennai

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.