தமிழக மீனவர்கள் வழக்குவிசாரணை ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி :இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.தமிழகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:தமிழகத்தின் நாகப்பட்டினம், துாத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு முறையாக உணவு அளிக்கப்படுவதில்லை. கடும் சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இவர்களையும்,கைப்பற்றப்பட்ட இயந்திரபடகுகளையும் மீட்டு வர, இலங்கை அரசுடன் பேச்சு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்தியா – இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையில், மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டது.இந்த மனு மீது பதில் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு கடந்த 2ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும் 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.