செப் -01 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிகைல் கார்பசேவ் மரணம்: பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபரும், அமெரிக்கா உடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மிகைல் கார்பசேவ் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1917ம் ஆண்டில் நடந்த ரஷ்ய புரட்சியின் மூலம், உலகின் மாபெரும் சக்தியாக மிகப்பெரிய பிரதேசமாக சோவியத் யூனியன் உருவானது. இதில் 15 நாடுகள் உறுப்பினர்களாக ஒன்றுபட்டு இருந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகித்த சோவியத் யூனியன், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக திகழ்ந்தது. அதே சமயம், கடுமையான கட்டுப்பாடுகள் … Read more

ஆம்புலன்ஸ் கதவு கோளாறு; நோயாளி பலியான பரிதாபம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோழிக்கோடு : கேரளாவில் விபத்தில் படுகாயம் அடைந்தவரை ஏற்றி வந்த ஆம்புலன்சின் கதவில் ஏற்பட்ட கோளாறால் திறக்க முடியவில்லை. அதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.கோழிக்கோடு அருகே வசித்தவர் கோயா, 53. இவர், நேற்று முன்தினம் நடந்த ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி வந்தனர். உடன், கோயாவின் நண்பரும் இருந்தார். கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்ததும், கோயாவுடன் … Read more

போலீசாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் தற்போது புதிய படத்தை இயக்க இருக்கிறார் . இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. படத்திற்கு சைரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. தற்போது இப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர், “இப்படத்தில் கீர்த்தி போலீஸ் … Read more

விண்வெளியில் அரிசி சாகுபடி; சீன விஞ்ஞானிகள் சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : விண்வெளி நிலைய ஆய்வகத்தில் நெற்பயிரை வளர்த்து, சீனா சாதனை படைத்துள்ளது. விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், சீன விண்வெளி நிலையத்தின், ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கடந்த ஜூலையில் தொடங்கிய இதற்கான பணிகளில், இரு வகை நெற்பயிர் விதைகளை அவர்கள் பயன்படுத்தினர். இதில், நெற்பயிர் 30 செ.மீ., … Read more

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த திருச்சிற்றம்பலம்..13 நாளில் கெத்து காட்டிய தனுஷ்!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில், ஆண் -பெண் நட்பை பேசிய இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் அதிரி புதிரியாக காணப்படுகிறது. ரசிகர்கள் தொடர்ந்து படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படம் நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி … Read more

'சினூக்' ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் – விமானப்படை தகவல்

புதுடெல்லி, இந்திய விமானப்படைக்கு சினூக் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரக ஹெலிகாப்டர்களான இவற்றின் மூலம் படைகள், தளவாடங்கள், வெடிபொருட்கள், எரிபொருள் போன்றவற்றை விரைவாக கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட 15 ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் நிலையில், அவற்றில் தற்போது அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இதனால் தங்களிடம் … Read more

20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசை – ஹர்திக் பாண்ட்யா முன்னேற்றம்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டிங் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், முகமது ரிஸ்வான் 2-வது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 17-வது இடத்திலும், விராட் கோலி 34-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டும் (792 புள்ளி), 2-வது இடத்தில் … Read more

புரட்சியாளர் சேகுவேராவின் மகன் மரணம்

கராக்கஸ், கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவேரா. புரட்சியாளர், டாக்டர், அரசியல்வாதி இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட சேகுவேராவுக்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் 3-வது மகன் கமிலோ சேகுவேரா. 60 வயதான கமிலோ சேகுவேரா கியூயாவில் தனது மகளுடன் வசித்து வந்தார். கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக இவர் இருந்து வந்தார். அதில் சேகுவேராவின் கிளர்ச்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் … Read more