வேட்பாளர் குற்ற வழக்கு ;சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்கு விபரங்கள் கட்சியின் இணையதளங்களில் வெளியிடப்படுவதை தேர்தல் கமிஷன் உறுதி செய்யும்படி உத்தரவிடக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:உத்தர பிரதேசத்தின் கைரானா சட்டசபை தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பில் நாஹித் ஹசன் என்ற ரவுடி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

latest tamil news

அவர் மீதான குற்ற வழக்குகள் குறித்த விபரங்கள் அக்கட்சியின் இணையதளம், அச்சு மற்றும் காட்சி ஊடகம், சமூக ஊடகம் போன்றவற்றில் வெளியிடப்படவில்லை. இது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறும் செயல். இதுபோல விதிகளை மீறும் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்து கட்சி இணையதளம் உட்பட அனைத்து ஊடகங்களிலும் விபரம் வெளியிடப்படுவதை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.